சொல் பொருள்
(பெ) பதிலுக்குப்பதில்
சொல் பொருள் விளக்கம்
பதிலுக்குப்பதில்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
tit for tat – An equivalent given in return
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குரல் கேட்ட கோழி குன்று அதிர கூவ மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப – பரி 8/19,20 அந்தக் காரின் இடிக் குரலைக் கேட்ட கோழி குன்றே அதிரும்படி கூவும்; அதைக் கேட்ட மதம் நிறைந்த யானையும் பதிலுக்குப்பதில் அதிர முழங்கும் மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின் குன்றம் குமுறிய உரை – பரி 8/34,35 மணவிழா முரசுகள் முழங்க முழங்க, அம் முழக்கத்திற்குப் பதிலுக்குப்பதில் முழங்கும் உன் திருப்பரங்குன்றம் முழங்கிய முழக்கம்; சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப அல்லாந்தான் போல பெயர்ந்தான் – கலி 111/20,21 அவன் சொல்லிய சொற்களுக்கெல்லாம், பதிலுக்குப்பதில் நான் சொல்ல, மனம் கலங்கியவன் போல அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்