சொல் பொருள்
(வி) 1 ஒளிவிடு, ஒளிர், சுடர், விளங்கு, 2. மின்னல் அடி,
(பெ) மின்னல்
சொல் பொருள் விளக்கம்
ஒளிவிடு, ஒளிர், சுடர், விளங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shine, glitter, gleam, glisten, flash
emit lightning
lightning
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும் கரும் கல் கான்யாற்று அரும் சுழி – நற் 292/6,7 ஒளிறுகின்ற வெள்ளைப் பளிங்குக்கற்களோடு, செம்பொன்னும் ஒளிரும் கருங்கற்களுக்கிடையே ஓடும் காட்டாற்றில் நீந்தமுடியாத சுழல்களில் திரியும் இரு விசும்பு அதிர மின்னி கருவி மா மழை கடல் முகந்தனவே – நற் 329/10,11 பெரிய வானம் அதிரும்படியாக மின்னலடித்து கூட்டமான பெரிய முகில்கள் கடல்நீரை முகந்துகொண்டுவருகின்றன பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்து ஆங்கு – பெரும் 484 பகலில் பெய்கின்ற துளிமழையின்கண் மின்னல் ஓடினாற் போன்று,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்