Skip to content

சொல் பொருள்

(வி) 1 ஒளிவிடு, ஒளிர், சுடர், விளங்கு, 2. மின்னல் அடி,

(பெ) மின்னல்

சொல் பொருள் விளக்கம்

ஒளிவிடு, ஒளிர், சுடர், விளங்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

shine, glitter, gleam, glisten, flash

emit lightning

lightning

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்
கரும் கல் கான்யாற்று அரும் சுழி – நற் 292/6,7

ஒளிறுகின்ற வெள்ளைப் பளிங்குக்கற்களோடு, செம்பொன்னும் ஒளிரும்
கருங்கற்களுக்கிடையே ஓடும் காட்டாற்றில் நீந்தமுடியாத சுழல்களில் திரியும்

இரு விசும்பு அதிர மின்னி
கருவி மா மழை கடல் முகந்தனவே – நற் 329/10,11

பெரிய வானம் அதிரும்படியாக மின்னலடித்து
கூட்டமான பெரிய முகில்கள் கடல்நீரை முகந்துகொண்டுவருகின்றன

பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்து ஆங்கு – பெரும் 484

பகலில் பெய்கின்ற துளிமழையின்கண் மின்னல் ஓடினாற் போன்று,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *