Skip to content
மிரியல்

மிரியல் என்பது மிளகு

1. சொல் பொருள்

(பெ) மிரியம், மிளகு,

2. சொல் பொருள் விளக்கம்

மிரியல் என்பது பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு.

மிளகின் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும்

மொழிபெயர்ப்புகள்

இத்தாவரம் தமிழில் மிளகு எனவும், கன்னடம்:மெனசு (menasu, ಮೆಣಸು) மலையாளம்: குறு மிளகு(Kuru Mulagu) தெலுங்கு: மிரியாலு அல்லது மிரியம் (miriyam, మిరియం) கொங்கணி: மிரியாகொனு (Miriya Konu) எனவும் அழைக்கப்படுகிறது.

English: Piper nigrum– Black pepper, Green pepper, Pink pepper, White pepper • Hindi: काली मिर्च Kali mirch • Marathi: गोलमिरिच Golmirich • Tamil: Kurumilagu • Malayalam: Kurumulaku • Telugu: Miryalatige • Kannada: Karimenasu • Urdu: Syah mirch • Gujarati: કાલો મિરિચ Kalomirich • Sanskrit: Marich

மிரியல்
மிரியல்

3. ஆங்கிலம்

pepper, Piper nigrum

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல்
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை – பெரும் 78-80

சிறியதாகிய சுளையினையுடைய பெரிய பலாப்பழத்தை ஒப்ப, மிளகின்
ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிய, வடு அழுந்தின வலிமையான முதுகினையும்,
உயர்த்திய செவியினையும் உடைய கழுதைகளுடைய
மிரியல்
மிரியல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *