சொல் பொருள்
(வி) 1. ஒளிர், பிரகாசி, சுடர்விடு, 2. பிறழ், புரளு, 3. கீழ்மேலாகு, 4. புரட்டித்தள்ளு
சொல் பொருள் விளக்கம்
1. ஒளிர், பிரகாசி, சுடர்விடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shine, gleam, glitter, sparkle, turn, roll, be upset, turn topsy-turvy, roll, turn over
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாம்பு உடை விடர ஓங்கு மலை மிளிர உருமு சிவந்து எறியும் பொழுதொடு – நற் 104/9,10 பாம்புகளை உடைய மலைப் பிளவுகளையுடைய உயர்ந்த மலைகள் ஒளிர்ந்து மின்னும்படியாக இடியேறு சினந்து இடிக்கும் பொழுதோடு மலங்கு மிளிர் செறுவின் – புறம் 61/3 விலாங்குமீன் பிறழ்கின்ற செய்யின்கண்ணே உளி வாய் சுரையின் மிளிர மிண்டி இரு நிலல் கரம்பை படு நீறு ஆடி நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் – பெரும் 92-94 உளி(போலும்) வாயைக் கொண்ட கடப்பாரையால் கீழ்மேலாகக் குத்திப் புரட்டி, கரிய நிலமாகிய கரம்பை நிலத்தில் உண்டாகின்ற புழுதியை அளைந்து, மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர் காலொடு பட்ட மாரி மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே – நற் 2/9,10 காற்றோடு கலந்த பெருமழை பெய்யும்போது பெரிய மலைப்பாறைகளைப் பெயர்த்துத்தள்ளும் பேரிடியினும் கொடியதாகும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்