சொல் பொருள்
(பெ) 1. தோள் மேல் அணியும் சட்டை, 2. மேம்பட்ட கை, 3. மேலெடுத்தகை, மேலே தூக்கிய கை,
சொல் பொருள் விளக்கம்
தோள் மேல் அணியும் சட்டை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a shirt put on shoulders, be great, uplifted arm
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தோள் பிணி மீகையர் – பதி 81/11 தோளிடத்தே பிணிக்கப்பட்ட மீகையினையுடையராய் மீகை – தோள்மேலணியும் சட்டை. சட்டையின் கை தோளை மூடி அதன்மேலே உயர்ந்து தோன்றலின் மீகை எனப்பட்டது – ஔவை.சு.து. உரை – உரைவிளக்கம் வென்றி ஆடிய தொடி தோள் மீகை எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன் – பதி 40/12-14 வெற்றிக் குரவை ஆடிய தொடி விளங்கும் தோள்களையும், மேம்பட்ட கையினையும், பகைவர் ஏழுவரின் முடிப்பொன்னால் செய்த ஆரம் அணிந்த திருமகள் தங்கியிருக்கும் மார்பினையும் உடைய, பொன்னால் செய்த அழகிய தலைமாலை அணிந்த, பொன்னாலான தேரினைக் கொண்ட நன்னனின் ஔவை.சு.து – உரை. ஔவை.சு.து – விளக்கம் – மீ கை என்பதற்குப் பழையவுரைகாரர் ”மேலெடுத்தகை” யென்றும், வென்றியாடிய என்னும் பெயரெச்சத்திற்கு மீ கை யென்னும் பெயரினை அவன் தான் வென்றியாடுதற்குக் கருவியாகிய கை எனக் கருவிப்பெயராக்குக என்றும் கூறுவர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்