சொல் பொருள்
(வி) போற்று, சிறப்பித்துக்கூறு
சொல் பொருள் விளக்கம்
போற்று, சிறப்பித்துக்கூறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
praise, adore, admire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும் வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் – பெரும் 34,35 விளங்குகின்ற நீரையுடைய கடலிடத்துப் பிறந்த சங்குகளில் மேலாகக்கூறப்படும் வலம்புரி(ச் சங்கை) ஒத்த, குற்றம் தீர்ந்த தலைமையினையும் பல் வெள்ளம் மீக்கூற உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக – மது 22,23 பல வெள்ள காலத்திற்கு புகழ் மிகுந்து சொல்லப்பட, உலகத்தை ஆண்ட உயர்ந்தவர் குடியில் தோன்றியவனே – வலியர் என வழிமொழியலன் மெலியர் என மீக்கூறலன் – புறம் 239/6,7 இவர் நம்மில் வலியர் என்று கருதி அவரைப் பணிந்து பேசமாட்டான் இவர் நம்மில் எளியர் என்று கருதி அவரிடம் தம்மைப் பெருமையாகப்பேசமாட்டான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்