Skip to content

சொல் பொருள்

(வி) 1. பழைய இடத்திற்கு அல்லது பழைய நிலைக்குத் திரும்பு, 2. திரும்பி வா,

சொல் பொருள் விளக்கம்

பழைய இடத்திற்கு அல்லது பழைய நிலைக்குத் திரும்பு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

go back, return, come back, return

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவரும் சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப ஊர்_வயின்
மீள்குவம் போல தோன்றும் – நற் 313/6-9

காந்தளின்
கமழ்கின்ற பூங்கொத்துக்கள் மலர்ந்த விருப்பந்தரும் மலைச்சாரலின்
கூதளம் படர்ந்த நறிய சோலை நாமின்றித் தனித்திருக்க, ஊருக்குத்
திரும்பிச் செல்வோம் போலத் தோன்றுகிறது

ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின்
யாஅம் தளிர்க்குவேம்-மன் – கலி 143/29,30

ஆச்சாமரம் தளிர்க்கும் காட்டிடையே சென்றவர் திரும்பி வந்தால்
நானும் அவர்களைப் போல் மனம் மகிழ்வேன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *