Skip to content
முசுண்டை

முசுண்டை என்பது முசுட்டைக்கொடி, பல் வேல் முசுண்டை என்ற மன்னனின் பெயர்.

1. சொல் பொருள்

‌(பெ) கொடிவகை, முசுட்டைக்கொடி; ஒரு சங்ககாலச் சிற்றரசன்

2. சொல் பொருள் விளக்கம்

வேம்பி என்ற ஊரின் சீறூர் மன்னன் ஆவான். பல்வேல் முசுண்டை என இவன் குறிக்கப் பெறுவதால் இவன் மிகுந்த படைவலிமை கொண்டவன் என்று அறியலாம். அவனது ஊர் “வேம்பி“, வளமான ஊராகையால் மகளிர் எழில் நலத்திற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. வேம்பு சுவையால் கசந்தாலும், குழையாலும் பூவாலும் இனிக்கிறது. தமிழ் வளர்த்த பாண்டியரது குடிச்சின்னமாக விளங்கியது.

கொடிவகை, கீரை வகைகளில் ஒன்று

  1. இப்பூவின் நிறம் வெள்ளை.
  2. இதன் மொட்டு கருப்பாக இருக்கும்.
  3. கூதிர் காலத்தில் பூக்கும் மலர்களில் ஒன்று.

குழையமன், குவையிலை, கரிமுகிழ், புன்கொடி முசுண்டை என்று இலக்கிய குறிப்புகள் உள்ளன.

முசுண்டை
முசுட்டை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Leather-berried bindweed, Rivea ornata, Choisy., Rivea hypocrateriformis, Midnapore Creeper, Common Night Glory

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

முசுண்டை செழிப்பான கொடியினைக் கொண்டிருக்கும்

கொழும் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் – சிறு 166

இதன் கொடி அழகின்றி இருக்கும்

புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ – நெடு 13

இதன் பூ வெண்மையாக இருக்கும்.

வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை – மலை 101

இதன் இலை செறிவாக அடர்ந்து இருக்கும்

முசுட்டைக்கொடி
முசுட்டைக்கொடி

குவை இலை முசுண்டை வெண் பூ குழைய – அகம் 94/2

குழை அமல் முசுண்டை வாலிய மலர – அகம் 264/2

தழை நிறைந்த முசுண்டையின் பூக்கள் வெள்ளியவாக மலர

இதன் மொட்டு சுருங்கியிருக்கும்

சுரி முகிழ் முசுண்டை பொதி அவிழ் வான் பூ – அகம் 235/9

முசுண்டை
முசுட்டை

சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்து சால்பதம் குவைஇ
நெடும் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண்
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
நல் எழில் இள நலம் – அகம் 249/6-10

சந்தனம் பூசிய உயர்ந்து அசையும் அழகிய திமிலினையுடைய
காளையினை முன்னர் நிறுத்தி மிக்க உணவினைக் குவித்து
நீண்ட தேரினை யானையுடன் சேர அளிக்கும் வளைந்த பூணையும்
பல வேற்படையையுமுடைய முசுண்டை என்பானது வேம்பி என்னும் ஊர் போன்ற
எனது நல்ல அழகிய இளமைச் செவ்வி

முசுட்டை
முசுட்டை

வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை/நீலத்து அன்ன விதை புன மருங்கில் – மலை 101,102

குவை இலை முசுண்டை வெண் பூ குழைய – அகம் 94/2

கொழும் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் – சிறு 166

புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ – நெடு 13

முசுண்டை
முசுண்டை

சுரி முகிழ் முசுண்டை பொதி அவிழ் வான் பூ – அகம் 235/9

பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என் – அகம் 249/9

குழை அமல் முசுண்டை வாலிய மலர – அகம் 264/2

பொன்முசுட்டை
பொன்முசுட்டை

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி – புறம் 320/1

சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய் – மது 281

பொன்முசுட்டை
பொன்முசுட்டை

குருகும் தளவமும் கொழும் கொடி முசுண்டையும்
விரி மலர் அதிரலும் வெண் கூதாளமும் – மது: 13/155,156

வெண் பூ முசுண்டை பைம் குழை மேய – உஞ்ஞை:49/113

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *