Skip to content

சொல் பொருள்

(வி.அ) அடுத்தடுத்து, முறைப்படி,

சொல் பொருள் விளக்கம்

அடுத்தடுத்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

one after another, 

according to the order, status etc.,

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்ட – நெடு 176,177

வேப்பம் பூ மாலையைத் தலையிலே கட்டின வலிய காம்பினையுடைய வேலோடே
முன்செல்கின்றவன் (புண்பட்ட வீரரை) முறைப்படி (வரிசையாகக்) காட்ட

கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை
மென் தினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன்_புலம் தழீஇய புறவு அணி வைப்பும் – பதி 30/23-25

மணம் மிக்க காட்டு மல்லிகை வளர்கின்ற, வலிய நிலத்தைச் சேர்ந்த, மனைகளில்
மென்மையான தினை மாவை விருந்தினருக்கு முறைப்படி பகிர்ந்தளிக்கும்
புன்செய் நிலங்களைத் தழுவிக்கிடக்கும் முல்லை நிலத்திற்கு அண்மையிலுள்ள குறிஞ்சிப் பகுதி மக்களும் –

உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தர_தர – அகம் 86/8-10

உச்சியில் குடத்தினை உடையவரும், கையினில் புதிய அகன்ற கலத்தினை உடையவரும் ஆகிய
மணத்தினைச் செய்துவைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர்
முன்னே தருவனவும், பின்னே தருவனவும் முறைப்படி தந்திட

விழவின், கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியும் இ உலகத்து – புறம் 29/22-24

விழாவின்கண் ஆடும், கூத்தரது வேறுபட்டகோலம் போல, முறைப்படி (அடுத்தடுத்து)
தோன்றி, இயங்கி, இறந்து போகின்ற இவ்வுலகத்தின்கண்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *