சொல் பொருள்

வலிமை, பெருமை, பழமை, எருமை, எருது,  செழுமை, கொழுமை, (ஊன்) துண்டம்

சொல் பொருள் விளக்கம்

வலிமை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

strength, greatness, antiquity, buffalo, ox, bullock, Plumpness, luxuriance, bit, part

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல் – பதி 45/16

வில் விசையால் வரும் அம்புகளை அடக்கிய வலிமையான வெள்ளிய தோலாலான கேடகத்தையும்,

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் – நற் 15/1

முழங்குகின்ற கடலலைகள் கொழித்துக் கொணர்ந்த பெரிதான மணல்மேடு

முரம்பு அடைந்து இருந்த மூரி மன்றத்து – அகம் 103/6

வன்னிலத்தைச் சார்ந்திருந்த பழமையான பெரிய மன்றிலே

காரிகை நீர் ஏர் வயல் காம களி நாஞ்சில்
மூரி தவிர முடுக்கு முது சாடி – பரி 20/53,54

பெண்ணின் தன்மையைக் கொண்ட அழகு என்னும் வயலில், காமவெறியாகிய கலப்பையைக் கட்டி
எம் தலைவரான எருமையைச் சோம்பிக்கிடக்காமல் முடுக்கிவிட்டு உழுகின்ற பலமுறை உழப்படும் உழவே!

நெறி படு மருப்பின் இரும் கண் மூரியொடு
வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர் – பதி 67/15,16

வளைவு வளைவாக அமைந்த கொம்பினையும் பெரிய கண்ணுமுடைய எருதுகளினுடையதும்
வேறு வளைந்த தலைகளையுடைய விலங்குகளினுடையதுமான தாழ்ந்த இழிவான இறைச்சியை விற்போரின்
ஔவை.சு.து.உரை

முதை சுவல் கலித்த மூரி செந்தினை – அகம் 88/1

பழங்கொல்லையாகிய மேட்டு நிலத்தில் தழைத்த கொழுத்த செந்தினையின்
வே.நாட்டார் உரை

திருந்தா மூரி பரந்து பட கெண்டி – புறம் 391/5

திருந்தாத ஊன்கறியைச் சிறுசிறு துண்டாகப் பரக்குமாறு துண்டித்து
திருந்தா மூரி – திருந்தாத ஊன்; மூரி – ஊன், ஔவை.சு.து.உரை, விளக்கம்
திருந்தா மூரி – big pieces of meat, வைதேகி ஹெர்பர்ட் விளக்கம்

வெண் நிண மூரி அருள – புறம் 393/14

வெள்ளிய ஊன் துண்டங்களைக் கொடுத்து உண்பித்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.