1. சொல் பொருள்
ஒரு பரப்பின் மீது கூட்டமாகச் சூழ்ந்து அமை, சுற்றிச்சூழ், கூட்டமாக நெருங்கிச் சுற்று, மூடு, திரள், தொகுதி, வலிமை, நெருக்கம், இறுகுதல், பெருமை, மிகுதி,
கூடுதல் பெருகுதல், 20 ஆடுகளைக் குறிப்பது
2. சொல் பொருள் விளக்கம்
கூடுதல் பெருகுதல் ஆகிய பொருளில் மொய் வழங்கப் படும். ஈ மொய்த்தல், எறும்பு மொய்த்தல், மொய் எழுதுதல் என்பவை அவை. ஆனால் ஆயர் வழக்கில் மொய் என்பது 20 ஆடுகளைக் குறிப்பதாக உள்ளது. நூறு, ஆயிரம், வெள்ளம் என்பவற்றை நினையலாம்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
swarm, throng, swarm around, crowd around, cover, enclose, flock, mass, strength, closeness, tightness, greatness, abundance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம் – அகம் 72/3 மின்மினிகள் கூட்டமாய்ச் சூழ்ந்திருக்கும் முரிந்த இடத்தினையுடைய புற்றினை களிறே, ————————- ——————————– —————————- ————————- சுறவு_இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே – புறம் 13/5-8 களிறுதான் ————————- ——————————- ————————- —————————– சுறவின் இனத்தை ஒத்த வாள் மறவர் சூழ தன்னை மருவிய பாகரை அறியாது மதம்பட்டது குளவி மொய்த்த அழுகல் சில் நீர் – குறு 56/2 காட்டு மல்லிகை இலைகள் மூடியதால் அழுகிப்போன சிறிதளவு நீரை மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல் – மது 417 மை ஒழுகினாற் போன்ற திரளான கரிய கூந்தலினையுமுடைய வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர் வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி – பதி 49/7-9 வெல்கின்ற போரினையுடைய வேந்தரும், குறுநில மன்னரும், வஞ்சினம் கூறி, மிகுந்த வலிமையால் மனம் செருக்கி, ஒன்றுகூடி வருகின்ற மோகூர் மன்னனின் வெற்றிதரும் சேனையின் கூட்டம் கலைந்து சிதையும்படி நெருங்கித் தாக்கி, மொய் வளம் பூத்த முயக்கம் யாம் கைப்படுத்தேம் – பரி 18/18 அந்தப் பரத்தையரின் இறுகல் மிகுந்த முயக்கத்தை நாம் நன்கு அறிந்துகொண்டோம், இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய பதினொரு வேளிரொடு வேந்தர் சாய மொய் வலி அறுத்த ஞான்றை – அகம் 246/11-13 மிக்க ஓசையையுடைய வீர முரசம் போர்க்களத்தே ஒழிந்துகிடக்க வேளிர் பதினொருவருடன் இரு பெரு வேந்தரும் நிலை கெட அவர்தம் மிக்க வலியைக் கெடுத்த நாளில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்