சொல் பொருள்
பெருமை, உயரம், பருத்த வயிறு
சொல் பொருள் விளக்கம்
பெருமை, உயரம், பருத்த வயிறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
greatness, height, large stomach, belly
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கணம்_கொள் இடு மணல் காவி வருந்த பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் – கலி 131/37,38 திரளாக வந்து குவியும் மணல் குவியலினால் கருங்குவளை மலர்கள் வருந்த, பிணங்கிவருகின்ற கருமை தங்கிய பெருமையுடையனவாகிய அலைகள் மணலைக் கரைத்து அருள்செய்யும் ஈங்கை முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் – நற் 124/4,5 ஈங்கையின் மொட்டுக்களும் மலரான புன மல்லிகையும் உயரமான மணல் குன்றின்மேல் பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 50,51 பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், சொரசொரப்பான பெரிய வயிற்றையும், (கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள் மோட்டு எருமை முழு_குழவி – பட் 14 பருத்த வயிற்றையுடைய எருமை (ஈன்ற)முதிர்ந்த கன்றுகள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்