மௌவல் என்பது ஒருவகைக் கொடி
1. சொல் பொருள்
மனை மல்லிகை, காட்டு மல்லிகை, மரமல்லி?, அடவிமல்லி, ஆகாயமல்லி, பன்னீர்ப் பூ, பவளமல்லி, வஞ்சகம்
2. சொல் பொருள் விளக்கம்
மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை), பன்னீர்ப் பூ எனவும்
வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம்.
- பெண்களின் பல் போல மௌவல் மொட்டு இருக்கும்
- வீட்டுநிலத்தில் மௌவலை வளர்ப்பர்
- இப்பூக்கள் இரவு நேரத்தில் பூக்கும்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
jasmine, jasminum officinale, Jasminum Sessiliflorum, Jasminum angustifolium
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல் – கலி 14/3
மணக்கும் காட்டுமல்லியின் மொட்டுகளைப் போன்ற, வண்டுகள் விரும்பும், ஒழுங்குபட்ட வரிசையான வெண்ணிறப் பற்கள்
"பூம்பாவாய் ஆம்பல், புன்னகையோ மௌவல்" , (”வாஜி வாஜி" திரைப்படப் பாடல், சிவாஜி (2007))
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின - நற் 122/4 ஞாழல் மௌவல் நறும் தண் கொகுடி - குறி 81 மலரின் மௌவல் நலம் வர காட்டி - நற் 316/2 எல்-உறு மௌவல் நாறும் - குறு 19/4 மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம் - பரி 12/77 மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல் - கலி 14/3 மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப - கலி 27/4 மனை இள நொச்சி மௌவல் வால் முகை - அகம் 21/1 மௌவல் மா சினை காட்டி - அகம் 23/12 மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ - நற் 115/6 மௌவலொடு மலர்ந்த மா குரல் நொச்சியும் - அகம் 117/1
மணிச்சையும் மயிலையும் மௌவலும் மயக்கி - உஞ்ஞை:51/40 குளவியும் குறிஞ்சியும் வளவிய மௌவலும் சிறுசெங்குரலியும் சிறுசெண்பகமும் - இலாவாண:12/28,29 கலை கறித்து அருந்தும் மௌவலும் குருந்தும் கடுக்கையும் செறிந்திடும் நிழல் கீழ் - சீறா:5004/1 மௌவல் கமழ் குழல் மயிலை என் மகற்கு மணம் முடிக்க வரப்பெற்றேனால் - சீறா:1093/2 மௌவல் அம் குழல் கதிஜா-தம் வாட்டம் கண்டு - சீறா:1788/2 நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள் மலர் அவை வாரி - தேவா-சம்:2665/1 மரவத்தொடு மண மாதவி மௌவல் அது விண்ட - தேவா-சம்:147/1 கொல்லையின் முல்லை மல்லிகை மௌவல் கொடி பின்னி - தேவா-சம்:1093/3 தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே - தேவா- சம்:1461/4 புற விரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி - தேவா-சம்:2385/3 கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம் - தேவா-சம்:3294/3 மர விரி போது மௌவல் மண மல்லிகை கள் அவிழும் - தேவா-சம்:3427/2 வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல் - தேவா-சம்:4083/3 விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின் - தேவா-சம்:4126/3 மௌவல் நீள் மலர் மேல் உறைவானொடு - தேவா-அப்:2038/3 துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்தி கரம் வீரம் மிடைந்த - 1.திருமலை:5 94/3 நடையில் படர் மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினை காஞ்சி - 4.மும்மை:6 7/4 மௌவல் மாதவி பந்தரில் மறைந்து வந்து எய்தி - 6.வம்பறா:1 1057/1 வலம் காதின் மேல் தோன்றிப்பூ அணிந்து மல்லிகை வன மாலை மௌவல் மாலை - நாலாயி:262/1 மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழல சுழல் நீர் பயந்த - நாலாயி:1164/1 போது அலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து - நாலாயி:1750/3 மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை மாலையொடும் அணைந்த மாருதம் - நாலாயி:1839/3 மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தி - நாலாயி:1368/3 மான் கறி கற்ற கூழை மௌவல் சூழ் மயிலை பந்தர் - சிந்தா:2 485/3 மௌவல் அம் குழலாள் சுரமஞ்சரி - சிந்தா:4 874/2 கொய்தகை பொதியில் சோலை குழவிய முல்லை மௌவல் செய்ய சந்து இமய சாரல் கருப்புரக்கன்று தீம் பூ - சிந்தா:5 1267/1,2
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்