வஞ்சம்

வஞ்சம் என்பதன் பொருள்வஞ்சகம், வஞ்சனை, பழி தீர்க்கும் எண்ணம், ஆழ்ந்த வெறுப்பைக் கொள்.

1. சொல் பொருள்

(பெ) 1. வஞ்சகம், வஞ்சனை, தந்திரம், வஞ்சகம், ஏமாற்று, கொடுமை, பொய், பழி வாங்கு, பழி தீர்க்கும் எண்ணம், ஆழ்ந்த வெறுப்பைக் கொள்

2. சொல் பொருள் விளக்கம்

வஞ்சம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

cunning, deceit, cheating, lie, falsehood, malice/hatred, take revenge

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நெஞ்சத்த பிற ஆக நிறை இலள் இவள் என
வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்தீவாயோ – கலி 69/14,15

நெஞ்சத்துள் பிற எண்ணங்களை வைத்துக்கொண்டு, இவள் உறுதிப்பாடான மனத்தினள் அல்லள் என்று
வஞ்சகமாய் வந்து இங்கு என் மனவலிமையை வருத்துவாயோ!

யார் இவன் எம் கூந்தல் கொள்வான் இதுவும் ஓர்
ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து எம் மனை
வாரல் நீ வந்து ஆங்கே மாறு
என் இவை ஓர் உயிர் புள்ளின் இரு தலையுள் ஒன்று
போர் எதிர்ந்த அற்றா புலவல் நீ கூறின் என்
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது
ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா
பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து – கலி 89/1-9

“யார் இவன், எம் கூந்தலைப் பற்றுபவன்? இதுவும் ஒரு
நாட்டாமை(அதிகாரமுள்ள துடுக்குத்தனம்) போன்ற கொடுமையைக் கொண்டது, என் வீட்டுக்கு
வரவேண்டாம், நீ வந்த வழியே திரும்பிச் செல்”;
“என்ன இது? ஒரு உயிரும் இரு தலையும் கொண்ட சிம்புள் பறவையின் இரு தலைகளில் ஒன்று
மற்றொன்றுடன் சண்டைக்கு வந்தது போல் வெறுப்பு மொழிகளை நீ கூறினால் என்னுடைய
அருமையான உயிர் நிற்கும் வழி என்ன?”
“ஏடா! எமக்குத் தெரியும்! வெகுளவேண்டாம்! எதையும் செய்ய வல்லவனே!
பெரிய காட்டிலிருக்கும் கொற்றவைக்குப் பேய் வந்து குறி சொன்னாற்போல,
உன்னை நீ வருத்திக்கொள்ளாதே உன் வஞ்சகமொழிகளை உரைத்து”.

ஆய் மலர் புன்னை கீழ் அணி நலம் தோற்றாளை
நோய் மலி நிலையளா துறப்பாயால் மற்று நின்
வாய்மை கண் பெரியது ஓர் வஞ்சமாய் கிடவாதோ – கலி 135/9-11

அழகிய மலர்களையுடைய புன்னை மரத்தடியில் உன்னிடம் தன் அழகிய நலத்தை இழந்தவளைக்
காமநோய் மிகுந்த நிலையினளாய் மாற்றிவிட்டு அவளைக் கைவிடுவாயேல், அது உன்
வாய்மையே வழங்கும் வாழ்க்கையில் பொய்யும் இடம்பெற்றதாய் முடியாதா?

பொறுமின் பிறர் கடும் சொல் போற்றுமின் வஞ்சம்
வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும் - நாலடி:18 2/2,3

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.