வண் என்பதன் பொருள் வளம், செழிப்பு, 2. மிகுதி, 3. பெரியதாய் இருத்தல், 4. கைவண்மை, ஈகை, கொடை, 5. வாளிப்பு, உடல் திரட்சி, செழுமை,
1. சொல் பொருள் விளக்கம்
(பெ) 1. வளம், வளமை; வளப்பம், செழிப்பு, 2. மிகுதி, 3. பெரியதாய் இருத்தல், 4. கைவண்மை, ஈகை, கொடை, வள்ளல் தன்மை, 5. வாளிப்பு, உடல் திரட்சி, அழகு செழுமை,
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
Fertility; fecundity, abundance, largeness, bigness, bounty, liberality, munificence, rotundity,
bounty, liberality, quality, property, nature, beauty; truth, fruitfulness, fertility, abundance, strength
3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் – திரு 31 வளமுடைய செவிகளில் இட்டு நிறைந்த பிண்டியினது ஒள்ளிய தளிர் வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 106 மிகுதியான புகழ் நிறைந்து பகைவருடலைப் பிளந்து மீட்டும் வேலை வாங்கிய நிமிர்ந்த தோள்கள் வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் – சிறு 27 பெரிய குலையினையுடைய பனை வளர்த்த நுங்கின்கண் உள்ள தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என் – நற் 350/4 தேர்களை வழங்கும் வண்மையுடையவனாகிய விரான் என்பானது இருப்பையூரை ஒத்த வலவன் ஆய்ந்த வண் பரி நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே – அகம் 20/15,16 பாகன் ஆய்ந்து தெரிந்த நன்கு வளர்ந்த குதிரைகள் (பூட்டிய) நிலா வெளிச்சம் போன்ற வெண்மணலில் சுற்றிச் சுற்றி வரும் ஒரு தேர் உள்ளது என்று வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என - திரு 285 வரு முலை அன்ன வண் முகை உடைந்து - சிறு 72 வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த - பெரும் 353 வான வண் கை வளம் கெழு செல்வர் - மது 442 ஒண் குழை புணரிய வண் தாழ் காதின் - மது 709 வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க - நெடு 22 வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம் - மலை 337 கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ் - நற் 91/8 பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல் - நற் 99/7 தேர் வண் மலையன் முந்தை பேர் இசை - நற் 100/9 வண் பரி தயங்க எழீஇ தண் பெயல் - நற் 121/9 வண் மகிழ் நாள்அவை பரிசில் பெற்ற - நற் 167/3 ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ் - நற் 190/2 வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ் - நற் 198/10 தண் புதல் அணி பெற மலர வண் பெயல் - நற் 248/3 பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி - நற் 253/7 மாரி வண் மகிழ் ஓரி கொல்லி - நற் 265/7 தேர் வண் சோழர் குடந்தை_வாயில் - நற் 379/7 ஓவாது ஈயும் மாரி வண் கை - குறு 91/5 வண் தேர் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து - குறு 260/6 வடு கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும் - ஐங் 14/2 தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள் - ஐங் 55/2 வண் துறை நயவரும் வள மலர் பொய்கை - ஐங் 88/1 வண் சினை கோங்கின் தண் கமழ் படலை - ஐங் 370/1 நுண் புரி வண் கயிறு இயக்கி நின் - ஐங் 489/4 வண் பரி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே - ஐங் 489/5 வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து - பதி 31/22 ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து - பதி 42/13 வண் கை வேந்தே நின் கலி மகிழானே - பதி 43/36 வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல் - பதி 51/17 மலர்ந்த மார்பின் மா வண் பாரி - பதி 61/8 வண் தார் புரவி வழி நீங்க வாங்குவார் - பரி 19/32 வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப - பரி 23/50 மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள் - கலி 24/6 தேர் ஈயும் வண் கையவன் - கலி 42/21 வண் பிணி தளைவிடூஉம் வயல் அணி நல் ஊர - கலி 73/5 வண்ண வண் தோன்றியும் வயங்கு இணர் கொன்றையும் - கலி 102/3 வண் பரி நவின்ற வய_மான் செல்வ - கலி 125/5 மழை வளம் தரூஉம் மா வண் தித்தன் - அகம் 6/4 வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்து - அகம் 37/7 கண் என மலர்ந்த சுனையும் வண் பறை - அகம் 38/11 வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை - அகம் 59/4 மழ புலம் வணக்கிய மா வண் புல்லி - அகம் 61/12 ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன் - அகம் 77/16 மா வண் கடலன் விளங்கில் அன்ன எம் - அகம் 81/13 செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர - அகம் 86/27 மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி - அகம் 113/4 மழை மருள் பல் தோல் மா வண் சோழர் - அகம் 123/10 வண் பெயற்கு அவிழ்ந்த பைம் கொடி முல்லை - அகம் 124/11 இசை நல் ஈகை களிறு வீசு வண் மகிழ் - அகம் 152/11 வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து - அகம் 178/9 வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது - அகம் 179/5 வண் தோட்டு தொடுத்த வண்டு படு கண்ணி - அகம் 191/3 அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் - அகம் 208/4 மழை சுரந்து அன்ன ஈகை வண் மகிழ் - அகம் 238/13 வண்டு படு நறவின் வண் மகிழ் பேகன் - அகம் 262/16 வருவது மாதோ வண் பரி உந்தி - அகம் 278/9 உரை சால் வண் புகழ் பாரி பறம்பின் - அகம் 303/10 தொலையா வேலின் வண் மகிழ் எந்தை - அகம் 308/8 நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற - அகம் 338/9 வலவன் வண் தேர் இயக்க நீயும் - அகம் 340/4 மாவும் வண் தளிர் ஈன்றன குயிலும் - அகம் 355/1 பொய்யா நல் இசை மா வண் புல்லி - அகம் 359/12 மா வண் கழுவுள் காமூர் ஆங்கண் - அகம் 365/12 வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய - அகம் 376/15 மா வண் தோன்றல் வந்தனை சென்மோ - அகம் 394/12 தண் கயம் பயந்த வண் கால் குவளை - அகம் 395/1 கணை கழிந்து அன்ன நோன் கால் வண் பரி - அகம் 400/14 கணை பொருது கவி வண் கையால் - புறம் 7/3 தேர் வண் கிள்ளி தம்பி வார் கோல் - புறம் 43/10 தேர் வண் பாரி தண் பறம்பு நாடே - புறம் 118/5 ஈதல் எளிதே மா வண் தோன்றல் - புறம் 121/4 வண் பரி நெடும் தேர் பூண்க நின் மாவே - புறம் 146/11 பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ் - புறம் 151/5 மாரி வண் கொடை காணிய நன்றும் - புறம் 153/5 தேர் வண் கிள்ளி போகிய - புறம் 220/6 மலை கெழு நாட மா வண் பாரி - புறம் 236/3 வண் பரி புரவி பண்பு பாராட்டி - புறம் 301/13 வளி தொழில் ஒழிக்கும் வண் பரி புரவி - புறம் 304/3 வெண் காழ் தாய வண் கால் பந்தர் - புறம் 324/10 வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டு - புறம் 338/9 வண் கை எயினன் வாகை அன்ன - புறம் 351/6 மா வண் தித்தன் வெண்ணெல் வேலி - புறம் 352/9 கரவு இல்லா கவி வண் கையான் - புறம் 377/8 வண் புள்ளி மாறன் பொறையன் புணர்த்து யாத்த - ஐந்50:51/2 வண் துடுப்பு ஆய் பாம்பு ஆய் விரல் ஆய் வளை முரி ஆய் - திணை150:119/3 புண் கயத்து உள்ளும் வயல் ஊர வண் கயம் - திணை150:142/2 வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா - குறள்:24 9/1 திரு வாயில் ஆய திறல் வண் கயத்தூர் - ஆசாரக்:101/5 வரம்பிடை பூ மேயும் வண் புனல் ஊர - பழ:107/3
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்