Skip to content

சொல் பொருள்

(வி) 1. வழியில்செல், 2. சரியான வழியில் நடத்திச்செலு, 3. நேர்ப்படு, சந்தி, 4. தொடர்ந்து செல், 5. விருப்பப்படி நட, கட்டுக்குள் இரு, 6. சூழ்ந்திரு,

சொல் பொருள் விளக்கம்

வழியில்செல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

go along the path, set on the right path, meet, encounter, follow, be as per one’s desire, be under some one’s control, surround

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர் வழி வழிப்பட்ட
நெஞ்சே நல்வினைப்பாற்றே ஈண்டு ஒழிந்து – நற் 107/6-8

புன்மையான இலையையுடைய ஓமை மரங்களுடைய புலிகள் நடமாடும் கடிய பாதையில்
சென்ற நம் காதலரின் வழி வழியே தொடர்ந்து சென்ற
நம் நெஞ்சமே நற்பேறு பெற்றதாகும்;

நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் – புறம் 192/9-11

நீரின் வழியே போம் மிதவை போல, அரிய உயிர்
ஊழின்வழியேபடும் என்பது, நன்மை கூறுபாடறிவோர்
கூறிய நூலானே தெளிந்தேம்

ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல் – நற் 240/8

பசுக்களை நடத்திச்செல்பவர்கள் தோண்டிய குழிவான பள்ளத்தின் நீரை

புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு – அகம் 395/10

தனிமையை நேர்ப்பட்ட கலங்கிய உள்ளத்துடன்

ஏவல்_இளையரொடு மா வழிப்பட்டு என – நற் 389/5

ஏவின செய்யும் இளைஞரோடு புனத்தை அழிக்கும் மாவாகிய பன்றியைப் பின்தொடர்ந்து செல்ல

பொலம் தார் யானை இயல் தேர் பொறைய
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து
நின் வழிப்படார் ஆயின் – பதி 75/3-5

பொன்னால்செய்த மாலையை அணிந்த யானையையும், இலக்கணம் அமைந்த தேரினையும் உடைய
இரும்பொறையே!
முடியுடை வேந்தரும், குறுநில மன்னரும், பிறரும் உன்னைக் கீழ்ப்பணிந்து
உன் விருப்பப்படி நடக்காவிட்டால்,

பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம் – அகம் 297/14,15

பூளைப் பூவினைப் போல விளங்குகின்ற மயிரினையுடைய (பூனைக்)குட்டிகள்
திங்களைச் சூழ்ந்துள்ள விண்மீன் போலத் தம் தாயின் பின் சூழ்ந்திருக்கும்
– நாட்டார் உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *