சொல் பொருள்
(பெ) தோள் அணி,
சொல் பொருள் விளக்கம்
தோள் அணி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
an ornament worn on shoulders
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துனைந்து ஆடுவார் ஆய் கோதையர் அலர் தண் தாரவர் காதில் தளிர் செரீஇ கண்ணி பறித்து கை வளை ஆழி தொய்யகம் புனை துகில் மேகலை காஞ்சி வாகுவலயம் எல்லாம் கவரும் இயல்பிற்றாய் தென்னவன் ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட தானையான் வையை வனப்பு – பரி 7/43-50 விரைந்து நீருக்குள் விளையாடும் ஆராய்ந்தணிந்த மாலையினையுடைய பெண்கள், மலர்ந்த குளிர்ந்த மாலையணிந்த ஆடவர், ஆகியோருக்கு, முறையே, காதுகளில் தளிர்களைச் செருகியும், தலையின் மாலையைப் பறித்துக்கொண்டும், பெண்களின் கைவளையல்கள், மோதிரங்கள், தலையணியாகிய தொய்யகங்கள், உடுத்தியிருந்த ஆடை, மேகலைகள், காஞ்சிகள் ஆகியவற்றையும், ஆண்களின் தோள்வளையங்கள் ஆகிய எல்லாவற்றையும் கவர்ந்து செல்லும் தன்மையையுடையதாய், பாண்டிய மன்னன் பகைவரின் தோற்றுப்போன நிலத்துக்குள் புகுவதைப் போன்று இருந்தது, அந்தப் பகைவரைக் கொன்றழித்த படையை உடையவனின் வையையின் வனப்பு;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்