வாரணம்

வாரணம் என்பதன் பொருள்யானை.

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) 1. கோழி,  2. யானை, 3. சங்கு, 4. நிவாரணம், விடுதல், 5. பன்றி, 6. கடல், 7. தடை, 8. கவசம், 9. உறையூர்

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

cock, elephant, conch

3.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப – மது 673

பொறிகளுள்ள மயிரினையுடைய கோழிச்சேவல் விடியற்காலத்தை அறிந்து கூவ,

காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிர கெண்டி
நாள்_இரை கவர மாட்டி – நற் 21/8-11

காண்போர் விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல்
மழை நீர் ஓடிய அகன்ற நெடிய முல்லைக் காட்டில்
புலராத ஈர மணலை நன்றாகக் கிளறி
அன்றைய நாளுக்குரிய இரையை அலகினால் பற்றிக் கொன்று

முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்
குரல் கேட்ட கோழி குன்று அதிர கூவ
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப – பரி 8/17-20

முதல்வனே! உன் ஊர்தியாகிய யானை பிளிறும் ஒலியின் முழக்கத்தைக் கேட்ட
தன்மையது முகிலின் இடிக்குரல்;
அந்தக் காரின் இடிக் குரலைக் கேட்ட கோழி குன்றே அதிரும்படி கூவும்;
அதைக் கேட்ட மதம் நிறைந்த யானையும் எதிர்க்குரலிட்டு அதிர முழங்கும்;

முறம் செவி வாரணம் முன் குளகு அருந்தி – கலி 42/2

முறம் போன்ற காதுகளைக் கொண்ட யானை, தனக்கு முன்னுள்ள தழைகளை அருந்தி

பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப - மது 673

காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் - நற் 21/8,9

சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன் - நற் 297/7,8

சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதை சுவல் கிளைத்த பூழி மிக பல - நற் 389/8,9

செல்வ வாரணம் கொடுத்தோன் வானத்து - பரி 5/58

மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப - பரி 8/20

கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில் - பரி 19/91

முறம் செவி வாரணம் முன் குளகு அருந்தி - கலி 42/2

விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதர - அகம் 64/9

வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் - அகம் 172/1

வளை சிறை வாரணம் கிளையொடு கவர - அகம் 192/7

மற புலி உரற வாரணம் கதற - அகம் 392/16

கான வாரணம் ஈனும் - புறம் 52/16

பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப - புறம் 398/3

வைகறை யாமம் வாரணம் காட்ட - சிலப்.புகார் 6/116

முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய - சிலப்.புகார் 10/247

புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து என் - சிலப்.புகார் 10/248

வைகறை யாமத்து வாரணம் கழிந்து - சிலப்.மது 11/11

கானவாரணம் கதிர் வரவு இயம்ப - சிலப்.மது 13/37

4. பயன்பாடு

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் சொல்லியிருக்கிறார்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.