Skip to content
வாழை

வாழை என்பது ஒரு வகைப் பழ மரம்

1. சொல் பொருள்

(பெ) 1. வாழைமரம், முக்கனிகளில் ஒன்று

2. சொல் பொருள் விளக்கம்

இதன் இலையில் உணவு அருந்தலாம். இதன் காய் , பூ மற்றும் தண்டு ஆகியவற்றைச் சமைத்து சாப்பிடலாம். இம்மரத்தின் பட்டையில் இருந்து நார் உரித்து பூ மாலை கட்டப் பயன் படுத்தலாம்

முக்கனிகளில் ஒன்று. உயிரை காத்து வாழ வைக்கும் தன்மையைக் கொண்டதால் இந்த தாவரத்திற்கு இப்பெயர் வந்ததாம். இலை, காய், தண்டு, பூ, மட்டை, நார் அனைத்தும் பயனுள்ளவை.

இதில் செவ்வாழை, மொந்தன்வாழை, பேயன், பச்சைனாடன், பூவன், ரஸ்தாளி எனப் பல வகைகள் உண்டு.

ஒரு தெய்வீக சடங்குப் பொருளாகவும் பார்க்கப்பட்டு வருகிறது வாழைப்பழம்

வாழை
வாழை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Musa paradisica linn. bananatree, banana, plantain.

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வாழை
வாழை
வாழைப்பூ
வாழைப்பூ
வாழை முழுமுதல் துமிய தாழை - திரு 307

கோள் தெங்கின் குலை வாழை/கொழும் காந்தள் மலர் நாகத்து - பொரு 208,209

மால் வரை ஒழுகிய வாழை வாழை - சிறு 21

மால் வரை ஒழுகிய வாழை வாழை/பூ என பொலிந்த ஓதி ஓதி - சிறு 21,22

குலை முதிர் வாழை கூனி வெண் பழம் - பெரும் 359

வாழை வள்ளி நீள் நறு நெய்தல் - குறி 79

கோள் தெங்கின் குலை வாழை/காய் கமுகின் கமழ் மஞ்சள் - பட் 16,17

துறுகல் சுற்றிய சோலை வாழை/இறுகு குலை முறுக பழுத்த பயம் புக்கு - மலை 131,132

வாழை அம் சிலம்பின் வம்பு பட குவைஇ - நற் 176/7

படு நீர் சிலம்பில் கலித்த வாழை/கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை - நற் 188/1,2

வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில் - நற் 222/7

வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை - நற் 225/3

சோலை வாழை முணைஇ அயலது - நற் 232/3

பிணி முதல் அரைய பெரும் கல் வாழை/கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் - நற் 251/2,3

ஆழல் வாழி தோழி வாழை/கொழு மடல் அகல் இலை தளி தலை கலாவும் - நற் 309/4,5

குலை_வாய் தோயும் கொழு மடல் வாழை/அ மடல் பட்ட அருவி தீம் நீர் - நற் 355/3,4

வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய - நற் 399/4

வாழை மென் தோடு வார்பு-உறுபு ஊக்கும் - நற் 400/1

சோலை வாழை சுரி நுகும்பு இனைய - குறு 308/1

வாழை தந்தனையால் சிலம்பு புல்லெனவே - குறு 327/7

ததை இலை வாழை முழுமுதல் அசைய - ஐங் 460/3

அவல் எறி உலக்கை வாழை சேர்த்தி - பதி 29/1

மா தீம் தளிரொடு வாழை இலை மயக்கி - பரி 10/6

குலை உடை வாழை கொழு மடல் கிழியா - கலி 41/15

கடுங்கண் உழுவை அடி போல வாழை/கொடும் காய் குலை-தொறூஉம் தூங்கும் இடும்பையால் - கலி 43/24,25

தூங்கு இலை வாழை நளி புக்கு ஞாங்கர் - கலி 50/3

கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை - அகம் 2/1

வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில் - அகம் 8/9

வாழை வான் பூ ஊழ்-உறுபு உதிர்ந்த - அகம் 134/10

தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது - அகம் 141/20

சிலம்பில் போகிய செம் முக வாழை/அலங்கல் அம் தோடு அசை வளி உறு-தொறும் - அகம் 302/1,2

வாழை அம் சிலம்பில் துஞ்சும் - அகம் 328/14

வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் - அகம் 332/9

செழும் கோள் வாழை அகல் இலை பகுக்கும் - புறம் 168/13

வாழை பூவின் வளை முறி சிதற - புறம் 237/11

அடும் கரை வாழையின் நடுங்க பெருந்தகை - குறி 179

வாழை முழுமுதல் துமிய தாழை - திரு 307

வேம்பின் இலையுள் கனியினும் வாழை தன் - நாலடி:25 4/1

வாழை முது காய் கடுவன் புதைத்து அயரும் - ஐந்70:11/2

வாழை இரு கால் குலை - பழ:221/4

கல் வரை ஏறி கடுவன் கனி வாழை
  எல் உறு போழ்தின் இனிய பழம் கவுள் கொண்டு - கைந்:7/1,2

வாழைக்காய் உப்பு உறைத்தல் இல் - பழ:338/4

மெல் இலை வாழைக்கு தான் ஈன்ற காய் கூற்றம் - நான்மணி:82/2

மண் ஆர் குலை வாழையுள் தொடுத்த தேன் நமது என்று - திணை150:140/1

வாய்ந்த வாழை மா வருக்கை ஆசினி - தேம்பா:1 33/2

விரவ நீள் தலையின் வாழை விடும் கனி நக்கி தீம் கான் - தேம்பா:12 13/3

கன்னி அம் குமரி வாழை கமுகொடு மயங்க நாட்டி - தேம்பா:36 88/1

மாவின் கனியொடு வாழை தீம் கனி - மது:16/26

குமரி வாழையின் குருத்துஅகம் விரித்து ஈங்கு - மது:16/42

பெரும் குலை வாழையின் இரும் கனி தாறும் - வஞ்சி:25/47

வாழையும் கமுகும் தாழ் குலை தெங்கும் - மது:11/83

காய் குலை தெங்கும் வாழையும் கமுகும் - மது:13/193

வாழை தண்டே போன்ற குறங்கு இணை - மணி:20/61

காய் குலை கமுகும் வாழையும் வஞ்சியும் - மணி:1/46

தேமாங்கனி சிதறி வாழை பழங்கள் சிந்தும் - சிந்தா:1 31/3

பாசவல் இடிப்பவர் உலக்கை வாழை பல் பழம் - சிந்தா:1 68/1

வாழை தண்டு என திரண்டு வால் அரக்கு உண் செம் பஞ்சி - சிந்தா:1 174/2

கனைத்து வண்டு உழல்வன வாழை மாங்கனி - சிந்தா:3 825/2

குலை வாழை பழுத்த கொழும் பழனும் - சிந்தா:5 1191/1

கனி கொள் வாழை காட்டுள் கருமை மெழுகியவை போன்று - சிந்தா:6 1414/1

காஞ்சன கமுகு காய் பொன் கனி குலை வாழை சூழ்ந்து - சிந்தா:6 1497/1

வாழை மல்கிய மணி குலை கமுகொடு நடு-மின் - சிந்தா:12 2391/1

மடுவில் மதர்த்து உணரா வாழை தண்டில் பல துஞ்சும் - சிந்தா:13 2601/2

கொழு மடல் குமரி வாழை துகில் சுருள் கொண்டு தோன்ற - சிந்தா:13 2716/1

வள்ளி இன் அமுதும் வரை வாழையின்
  தெள்ளு தீம் கனியும் சில தந்த பின் - சிந்தா:6 1424/1,2

தேன் நெய் வாசவல் குவவி தீம் கனி வாழையின் பழனும் - சிந்தா:7 1562/2

அள் இலை பலவின் அளிந்து வீழ் சுளையும் கனிந்து வீழ் வாழையின் பழனும் - சிந்தா:10 2109/1

வருக்கையின் பழம் வாழையின் கனி - சிந்தா:12 2402/1

பழுத்த தீம் பலவின் கனி வாழையின்
  விழு குலை கனி மாங்கனி வீழ்ந்தவை - சிந்தா:13 3069/1,2

பழ குலை கமுகும் தெங்கும் வாழையும் பசும்பொன்னாலும் - சிந்தா:1 115/3

செம் புற கனி வாழையும் தேன் சொரி - சிந்தா:4 869/1

வரு குலை கமுகும் வாழையும் நடுவார் வரை உமிழ் ஆவி போல் மாடத்து - சிந்தா:10 2111/3

மடல் எழுந்து அலமரும் கமுகும் வாழையும்
  மடி இரும் துகில் உடை மா கணாடியும் - சிந்தா:12 2406/2,3

நிரை மலர் தடத்து ஓடையின் வாழையின் நிழல் கீழ் - சீறா:475/3
நடை வழி சொரியும் அமுதமும் வாழை நறும் கனி உகுத்த செம் தேனும் - சீறா:47/2

கலையை ஒத்து விளங்கின வெண் சருவந்தம் மௌலி அணிகலன்கள் வாழை
 இலையை ஒத்த கொடி திரள் வீழ்ந்து இலங்கின செம் சோரி செக்கர் என்ன தோன்றும் - சீறா:4317/2,3

கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி - தேவா-சம்:45/2

கை போல் நான்ற கனி குலை வாழை காய் குலையின் கமுகு ஈன - தேவா-சம்:450/3

ஒள் வாழை கனி தேன் சொரி ஓத்தூர் - தேவா-சம்:582/3

குலை ஆர் தெங்கு குளிர் கொள் வாழை அழகு ஆர் குட மூக்கில் - தேவா-சம்:778/2

சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை
 ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே - தேவா-சம்:846/3,4

பக்கம் வாழை பாய் கனியோடு பலவின் தேன் - தேவா-சம்:1072/1

குலை ஆர் வாழை தீம் கனி மாந்தும் குற்றாலம் - தேவா-சம்:1073/2

கை போல் வாழை காய் குலை ஈனும் கலி காழி - தேவா-சம்:1103/2

மலைமகள் கூறு உடையான் மலை ஆர் இள வாழை
 குலை மலி தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற - தேவா-சம்:1153/2,3

குலை வாழை கமுகம் பொன் பவளம் பழுக்கும் குடவாயில் - தேவா-சம்:2092/3

குலை வாழை தீம் கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும் குறும்பலாவே - தேவா-சம்:2238/4

தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல் - தேவா-சம்:2567/3

வாழை அம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்ட - தேவா-சம்:2632/3

மடலுள் வாழை கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே - தேவா-சம்:2749/4

கொக்கு வாழை பலவின் கொழும் தண் கனி கொன்றைகள் - தேவா-சம்:2796/3

வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறுசெயும் வைகாவிலே - தேவா-சம்:3559/4

வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார் - தேவா-சம்:3596/3

வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர் - தேவா-சம்:3605/3

தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில் - தேவா-சம்:3635/3

ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல - தேவா-அப்:201/3

வாழை காய்க்கும் வளர் மருகல்நாட்டு மருகலே - தேவா-சுந்:112/4

கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் - தேவா-சுந்:302/2

வாழை இன் கனிதானும் மது விம்மி வருக்கை இன் சுளையும் - தேவா-சுந்:779/1

தாழை வாழை அம் தண்டால் செரு செய்து தருக்கு வாஞ்சியத்துள் - தேவா-சுந்:779/3

குழகா வாழை குலை தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே - தேவா-சுந்:784/3

கிளி வாழை ஒண் கனி கீறி உண் கேதாரம் எனீரே - தேவா-சுந்:797/4

வாழைக்கனி கூழை குரங்கு உண்ணும் மறைக்காடே - தேவா-சுந்:719/4

பொழில் ஆர்தரு குலை வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில் - தேவா-சம்:177/1

வாழைதான் பழுக்கும் நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு - தேவா-சுந்:622/2

தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு இனத்தை - தேவா-சம்:82/3

மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில் - தேவா-சம்:3633/3

ஈளை படுகில் இலை ஆர் தெங்கின் குலை ஆர் வாழையின்
 பாளை கமுகின் பழம் வீழ் சோலை பழன நகராரே - தேவா-சம்:727/3,4

வடம் உலை அயலன கரும் குருந்து ஏறி வாழையின் தீம் கனி வார்ந்து தேன் அட்டும் - தேவா-சம்:845/3

வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது - தேவா-சுந்:757/1

மதுமது போன்று என்னை வாழைப்பழத்தின் மனம் கனிவித்து - திருவா:6 34/3

செழும் குலை வாழை நிழலில் துயில் சிலம்பா முனை மேல் - திருக்கோ:250/2

எழும் குலை வாழையின் இன் கனி தின்று இள மந்தி அம் தண் - திருக்கோ:250/1

கமுகு ஊறு தெங்கு கரும்பொடு வாழை
 அமுது ஊறும் காஞ்சிரை ஆங்கு அது ஆமே - திருமந்:248/3,4

முழுதும் பழுத்தது வாழை கனியே - திருமந்:2869/4

வாழை இடம் கொண்டு வாழ்கின்றவாறே - திருமந்:2922/4

கானக வாழை கனி நுகர்ந்து உள்ளுறும் - திருமந்:2997/3

வாழைக்கு சூரை வலிது வலிது என்பர் - திருமந்:2922/2

முக்காதம் ஆற்றிலே மூன்று உள வாழைகள்
 செக்கு பழுத்த திரிமலம் காய்த்தன - திருமந்:2916/1,2

எட்டியும் வேம்பும் இனியது ஓர் வாழையும்
 கட்டியும் தேனும் கலந்து உண்ண மாட்டாதார் - திருமந்:2901/2,3

வாழையும் சூரையும் வந்து இடம் கொண்டன - திருமந்:2922/1

வாழையும் சூரையும் வன் துண்டம் செய்திட்டு - திருமந்:2922/3

பூகம் ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி - 1.திருமலை:5 93/2

சேயவர்-தம்மில் மூத்த திருநாவுக்கரசை வாழை
  மேய பொன் குருத்து கொண்டுவா என விரைந்து விட்டார் - 5.திருநின்ற:5 23/3,4

ஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்கு பெரிய வாழை
  மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று - 5.திருநின்ற:5 24/2,3

காடு கொண்ட பூகம் வாழை காமர் தோரணங்களால் - 6.வம்பறா:1 986/4

வண்ண வீதி வாயில்-தொறும் வாழை கமுகு தோரணங்கள் - 6.வம்பறா:2 200/3

மாங்கனி நுகர்ந்த மந்தி வந்து வண்டு இரிய வாழை
 தீம் கனி நுகரும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே - நாலாயி:1291/3,4

செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு - நாலாயி:3707/3

மல் இலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து - நாலாயி:3765/2

செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ் - நாலாயி:1258/3

பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
 மச்சு அணி மாடங்கள் மீது அணவும் தண் திருவல்லவாழ் - நாலாயி:3432/2,3

குந்தி வாழையின் கொழும் கனி நுகர்ந்து தன் குருளையை தழுவி போய் - நாலாயி:1266/3

ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி - நாலாயி:1343/3

தூங்கு தண் பலவின் கனி தொகு வாழையின் கனியொடு மாங்கனி - நாலாயி:1845/3

தோரணம் செறி தார் வாழை ஏய் தொடை மீதில் நின்று இடை நூல் போல் உலாவியெ - திருப்:197/5

துகிரின் கொடி ஒடியும்படி நடனம் தொடை வாழை மறையும்படி துயல் சுந்தர சுக மங்கையரோடு - திருப்:467/5

கமல வாழை மனும் தொடையார் சர சுங்க மாடை - திருப்:474/4

மா தண் ஆரு வனம் குயில் கொஞ்சிட தேங்கு வாழை கரும்புகள் விஞ்சிடு - திருப்:475/13

சுற்றுவித்து உறு வாழை சேர் தொடை விலைமாதர் - திருப்:504/4

குதித்து வானரம் மேல் ஏறு தாறுகள் குலைத்து நீள் கமுகு ஊடாடி வாழை கொள் - திருப்:746/13

கொலை போர் களம் மிசை தினம் ஏற்று அசுரர்கள் குடி ஏற்றிய குக உயர் வாழை - திருப்:905/6

வாங்கு கை யானை என ஈன் குலை வாழை வளர் வான் பொழில் சூழும் வயல் அயல் ஏறி - திருப்:1240/5

பூக குலையே விழ மென் கயல் தாவ குலை வாழைகளும் செறி - திருப்:300/11

அகி சேர் அல்குலார் தொடை வாழையின் அழகு ஆர் கழல் ஆர்தர ஏய்தரு - திருப்:721/5

வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல - திருப்:27/15

வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல - திருப்:40/15

செழிக்கும் சாலியும் மேகம் அளாவிய கருப்பம் சோலையும் வாழையுமே திகழ் - திருப்:35/15

மாங்கனி வாழையின் கனி வருக்கையின் - வில்லி:41 193/1

வாழையும் கமுகும் நாட்டி மணி ஒளி தீபம் ஏற்றி - வில்லி:22 117/2

அள் இலை வாழை அகம் போழ்ந்து இறுத்த - உஞ்ஞை:40/12

வாழை கானமும் வார் குலை தெங்கும் - உஞ்ஞை:48/152

கரும் தாள் வாழை பெரும் குலை பழனும் - உஞ்ஞை:51/18

கான வாழை தேனுறு கனியும் - மகத:2/29

வளம் கெழு வாழை இளம் சுருள் வாங்கி - மகத:9/11

வாழை அம் தாள் உறழ் குறங்கின் வாழை - வத்தவ:11/74

வாழை அம் தாள் உறழ் குறங்கின் வாழை
  கூம்பு முகிழ் அன்ன வீங்கு இள வன முலை - வத்தவ:11/74,75

காற்று எறி வாழையில் கலங்கி மெய் நடுங்கி - உஞ்ஞை:43/138

காற்று எறி வாழையின் ஆற்ற நடுங்கி - மகத:14/156

வழை சேர் வாழையும் கழை சேர் கானமும் - உஞ்ஞை:46/277

வருக்கையும் மாவும் வழையும் வாழையும்
  அருப்பிடை நிவந்த ஆசினி மரமும் - உஞ்ஞை:50/23,24

வழையும் வாழையும் கழையும் கால் கீண்டு - உஞ்ஞை:51/48

பழு குலை கமுகும் விழு குலை வாழையும்
  கரும்பும் இஞ்சியும் ஒருங்கு உடன் நிரைத்து - இலாவாண:1/3,4

வழையும் வாழையும் கழை வளம் கவினிய - இலாவாண:12/16

அம் தீம் பலவும் அள் இலை வாழையும்
  முதிர் கோள் தெங்கொடு முன்றில் நிவந்து - இலாவாண:15/26,27

பலவும் மாவும் குலை வளர் வாழையும்
  இரும் கனி நாவலும் இள மாதுளமும் - இலாவாண:20/62,63

கணை கால் இகணையும் கமுகும் வாழையும்
  சினை பெரு மாவும் பணை கால் பலாவும் - மகத:19/38,39

மருந்தினும் இனியன வருக்கை வாழை மா - பால:5 40/2

கன்னி நல் நகர் வாழை கமுகொடு நடுவாரும் - பால:23 23/2

காயும் புள்ளி கற்கடம் நாகம் கனி வாழை
 வேயும் போன்றான் என்று மயங்கா விழுகின்றாள் - அயோ:6 18/3,4

பெரிய மா கனி பலா கனி பிறங்கிய வாழை
 அரிய மா கனி கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்ப - அயோ:10 33/2,3

கன்னி இள வாழை கனி ஈவ கதிர் வாலின் - ஆரண்:3 58/1

மாணிக்கம் பனசம் வாழை மரகதம் வயிரம் தேமா - ஆரண்:10 96/1

தண்டலை வாழை அன்ன குறங்கிடை அல்குல் தட்டில் - சுந்:2 186/1

வார தண் குலை வாழை மடல் சூழ் - யுத்1:3 97/3

மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள்
 அங்கு அவர் கழுத்து என கமுகம் ஆர்ந்தன - அயோ:2 37/1,2

தாறு நாறுவ வாழைகள் தாழையின் - கிட்-மிகை:15 2/1

இரு குறங்கின் பிறங்கிய வாழையில்
 குருகு உறங்கும் குயிலும் துயிலுமால் - கிட்:15 41/3,4

மாங்கனி தாழையின் காய் வாழையின் கனிகளோடும் - ஆரண்-மிகை:16 1/1

சூத கனி ஊறல் ஏற்ற சுருள் வாழை
  கோது இல் நறவு ஏற்கும் குப்பி என மாதரார் - நள:205/1,2

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்

படம் : சுமைதாங்கி; வரிகள்: கண்ணதாசன்
வாழை இலை
வாழைஇலை
வாழைத்தண்டு
வாழைத்தண்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *