சொல் பொருள்
விப்பு – நீர் இல்லாமையால் நிலத்தில் விழும் விரிவு.
வெடிப்பு – மண் கல் முதலியவை பிளந்து காணல்.
சொல் பொருள் விளக்கம்
விப்பு, வெடிப்பு என்பவை இரண்டும் பிளந்தவையே. ஆனால் ‘விப்பு’ சிறியது; மெல்லியது; கோடு போல்வது. வெடிப்போ ஆழம் அகலம் நீளம் எல்லாமும் அகன்ற பிளப்பு. விப்பின் நிலையை அதன் விரிவு, விரிசல் என்னும் பெயர்கள் விளக்கும். வெடிப்பை வெடி வைத்துத் தகர்க்கும் தகர்ப்பு விளக்கும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்