Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வெற்றி, 2. வலிமை, 3. விசேடம், சிறப்பியல்பு,

சொல் பொருள் விளக்கம்

வெற்றி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

victory, strength, Distinctive excellence

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி – திரு 38

கோழியின் உருவத்தைத் தன்னிடத்தே கொண்டு உயர்ந்த வென்று அடுகின்ற வெற்றியையுடைய கொடி

வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா – திரு 55

வென்று அழிக்கும் திறலையுடைய போர்க்களத்தைப் பாடி, தோளை அசைத்து

பெரு விறல் யாணர்த்து ஆகி அரிநர் – புறம் 42/12

பெரிய விசேடத்தையுடைய புதுவருவாயை உடைத்தாய்
– ஔவை.சு.து.உரை

விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் – குறி 3

தனிச்சிறப்புக் கொண்ட நகைகள் கழன்று விழப்பண்ணின, குணப்படுத்த முடியாத கொடிய நோய்

வேய் மருள் பணை தோள் விறல் இழை நெகிழவும் – நற் 85/2

மூங்கில்போலும் பருத்த தோளிடத்துச் சிறந்த தொடியும் முன்கையிடத்து வளையும் நெகிழ்ந்து வீழவும்
– தொடியும் வளையும் ஏனை அணிவகையிற் சிறந்தமை விளங்க விறலிழை என்றார்
– ஔவை.சு.து.உரை, விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *