Skip to content

சொல் பொருள்

(பெ) 1. போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண்,

2. மிகுந்த துன்பம் தரும் புண்,

சொல் பொருள் விளக்கம்

போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Wound of a warrior on his face or breast received in battle, considered as a
symbol of bravery

grievous wound

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர்
ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து – நெடு 171,172

யானையை (முன்னர்)க் கொன்ற பெரும் செயலையுடைய வீரரின், சுடர்விடும் வாளினால் ஏற்பட்ட விழுப்புண்ணைக் காண்பதற்காக (பாசறையைவிட்டு)வெளியில் வந்து,

கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடு வசி விழுப்புண் தணிமார் காப்பு என
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் – மலை 302-304

(வளைந்த வரிகளைக்கொண்ட)புலி பாய்ந்ததால் (தம்)கணவர் மார்பில்(ஏற்பட்ட) நீண்ட பிளவாகிய துன்பம் தரும் புண்ணை ஆற்றுவதற்காக, காக்கக்கூடியது என (ஆற்றுக் கருமணல் போல் அலை அலையான)நெறிப்பு உள்ள மயிரினையுடைய (மலை)இடைச்சியர் பாடலோசையும்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *