Skip to content

சொல் பொருள்

1. (வி) ஒழி, இல்லாமற்போ, 

2. (பெ) 1. நெகிழ்தல், ஒதுங்குதல், 2. விடுதலை, 3. விடுபட்டது,

சொல் பொருள் விளக்கம்

ஒழி, இல்லாமற்போ, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cease, sliping off, liberation, that which is left out (after removing the unwanted things)

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட
தண் தாழ் அருவி அர_மகளிர் ஆடுபவே – கலி 40/22,23

“விண்ணைத் தொடுகின்ற மலையினில் பந்து எறிந்து விளையாடிய சோர்வு தீரும்படியாக
குளிர்ச்சியாய் விழுகின்ற அருவியில் தேவ மகளிர் ஆடுகின்றனரே!

அரவு கிளர்ந்து அன்ன விரவு_உறு பல் காழ்
வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்துஇழை அல்குல் பெரும் தோள் குறுமகள் – நற் 366/1-3

பாம்பு படமெடுத்து உயர்ந்ததைப் போன்ற, வேறுபட்ட பலவான மணிகளைக் கோத்து
நெகிழ உடுக்கப்பட்ட நுண்ணிய ஆடை இடையிடையே வந்து பளிச்சிடும்
திருத்தமான அணிகலன் அணிந்த அல்குலையும் பெரிய தோளையும் உடைய இளையமகளின்
– வீடுறு நுண்டுகில் – இடையில் செறியச் செறுகாது நெகிழ்ந்து தொங்கவிடப்படும் முன்றானை.
– வீடுறு நுண்துகில் – நடத்தலால் ஒதுங்குதல் அமைந்த நுண்ணிய துகில் – பின்னத்தூரார்

பிணி வீடு பெறுக மன்னவன் தொழிலே – ஐங் 447/1

பிணிப்பிலிருந்து விடுதலை பெறுக, மன்னவனின் போர்த்தொழில்!

கோடை பருத்தி வீடு நிறை பெய்த – புறம் 393/12

கோடையிற் கொண்ட பருத்தியினின்று நீக்கிச் சுகிர்ந்த பஞ்சியானது நிறையத் திணித்த
– பருத்தி வீடு – பருத்தியினின்றும் எடுத்துக் கொட்டை நீக்கிச் சுகிரப்பட்ட பஞ்சு,
– பருத்தியினிறும் விடுபட்டது பருத்தி வீடாயிற்று – ஔவை.சு.து.உரை, விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *