சொல் பொருள்
வெட்டை – மேட்டுப்பாங்கான இடம்
வெளி – அகன்று பரந்து திறவையான இடம் அல்லது திறந்த வெளி.
சொல் பொருள் விளக்கம்
‘வெட்டை வெளி’ என வானத்தைச் சுட்டுவர். மேட்டுப் பாங்கான திறந்த வெளியிடமும் வெட்டைவெளி எனவே படும். ‘வெள்ளிடை மலை’ என்பது வெட்ட வெளிச்சம் பரப்பில் அமைந்த மலையாம். ‘இந்த பொருளை வெட்டையில் வை’ என்றால் ‘மேட்டில் வை’ என்பதும் பொருளாம். இன்றும் வழக்கில் உள்ளது. வெளி- வெளிப்படையே.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்