Skip to content

வெண்ணிப்பறந்தலை

வெண்ணிப்பறந்தலை

வெண்ணிப்பறந்தலை என்பதன் பொருள்வெண்ணி என்ற இடத்திலுள்ள போர்க்களம். இதுஇன்றைய கோவில்வெண்ணி என்னும் ஊர். இதனைத் திருவெண்ணி என்றும் குறிப்பிடுவர்

1. சொல் பொருள் விளக்கம்

கரிகாலன் யாது காரணம் பற்றியோ, சேர அரசனான பெருஞ்சேரலாதன் என்பானுடன் வெண்ணிப்பறந்தலை யிற் போர் செய்தான். இம்மன்னன் தஞ்சாவூர்க்கு 24 கி.மீ. தொலைவில் உள்ள வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் நிகழ்ந்த போரில் தன்னை எதிர்த்து வந்த சேர மன்னன் நெடுஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், பதினொரு வேளிரையும் ஒருங்கே தோல்வியுறச் செய்தான்.போரில் கரிகாலன் விட்ட அம்பு சேரலாதனது மார்பைத் துளைத்து ஊடுருவி முதுகினின்றும் வெளிப்பட்டது. அம்முதுகிற் பட்ட புண்ணைப் புறம் புண்ணாகும் என்று நாணிச் சேரன் தன் கையிற் பிடித்த வாளுடன் வடக்கிருந்து. பட்டினி கிடந்து உயிர் விட்டனன். இதனால், அற்றை நாளில் முதுகிற் புண்படல் தோல்வியாகக் கருதப் பட்டதென்பதை அறிலாம். வடக்கிருந்த பெருஞ்சேரலாதனைக் கழாத் தலையார் என்ற புலவர் பாடித் தம் துயரத்தை அழகுற விளக்கியுள்ளார். வென்ற முதற் கரிகாலனை வெண்ணிக் குயத்தியார்.

வெண்ணி என்னும் ஊரின் வாயிலை அடுத்திருந்த வெளியில் கரிகாலன் அவனது பகைவர்களை எதிர்த்துத் தாக்கினான். ஊர் வாயிலில் போர் நடைபெற்றதால் வெண்ணி வாயிலில் நடை பெற்றது என்றும், அந்த வாயில்வெளி போர்ககளமாகப் பயன் படுத்தப்பட்டதால் வெண்ணிப் பறந்தலையில் போர் நடைபெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெண்ணி என்பது வெண்ணிற மலர்கள் பூக்கும் நந்தியாவட்டம் செடியாகும். இன்றைய கோவில்வெண்ணி என்னும் ஊர்என்பது குறிப்பிடத்தக்கது.

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

A battlefield

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கரிகால்வளவனொடு வெண்ணிப்பறந்தலை
பொருது புண் நாணிய சேரலாதன் – அகநானூறு, 55: 10-11

கரிகால்வளவனோடு வெண்ணிப்பறந்தலையில்
போரிட்டு (முதுகில்) காயமடைந்த சேரலாதன்

வாளை வாளின் பிறழ, நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்
கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை
ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ,           5
விழவின் செலீஇயர் வேண்டும் மன்னோ;
யாணர் ஊரன் காணுநன்ஆயின்,
வரையாமைஓ அரிதே; வரையின்,
வரைபோல் யானை, வாய்மொழி முடியன்
வரை வேய் புரையும் நல் தோள்     10
அளிய தோழி! தொலையுந பலவே. - நற்றிணை 390 

வாளை மீனை வாள் போல் பிறழும்படி விட்டுவிட்டுப் 
பொய்கையில் நீர்நாய் இன்பமாகத் தூங்கும்.

(நீர்நாய் வாளைமீனை இரையாக்கிக் கொள்ளவது வழக்கம்)
(ஊரன் மனைவி என்னை இன்பமாக ஊரனுடன் புரளும்படி விட்டுவிட்டு உறங்குவாள் – உள்ளுறை)

கைவண் கிள்ளி, 
வெண்ணி (இக்காலக் கோயில்வெண்ணி என்னும் ஊர்) 
அரசன்.
வெண்ணி ஊர் வயல்களில் 
வெள்ளாம்பல் பூத்துக் கிடக்கும். 

அதன் அழகிய பூக்களைப் பறித்துத் 
தழையாடை புனைந்து 
என் மென்மையான அல்குல் மறையும்படி 
அணியாக நான் புனைந்துகொள்ள வேண்டும். 

அத்துடன் திருவிழா நடைபெறும்போது 
பகட்டாகச் செல்லவேண்டும். 

அவன் யாணர் ஊரன். 
அழிவில்லாத வருவாய் வளம் கொண்டவன். 
அவன் என்னைக் கண்டால் தழுவாமல் (வரையாமல்) 
விடமாட்டான். 

அரசன் வாய்மொழி முடியன் 
மலை போன்ற யானையை உடையவன். 

அவன் மலையில் இருக்கும் மூங்கில் போல் 
என் தோள் அழகானது. 

ஊரன் (ஊர் மேய்பவன்) 
என்னைப் பார்த்துவிட்டால், 
என் தோள் பாவம். 
அவன் இறுக்கி நசுக்குவான். 
அது இன்ப நசுக்கு. - நன்றி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “வெண்ணிப்பறந்தலை”

  1. Excellent explaination sir. Vennipparandhalai war was named as second gurushetra in yavana rani story. thanks for sharing the information. Great.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *