Skip to content

சொல் பொருள்

வெம்மை, வெப்பம், தீங்கு, துன்பம், சூடானது

சொல் பொருள் விளக்கம்

வெம்மை, வெப்பம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

heat, sorrow, distress, that which is hot

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காழின் சுட்ட கோழ் ஊன் கொழு குறை
ஊழின்ஊழின் வாய் வெய்து ஒற்றி – பொரு 105,106

இரும்புக் கம்பியில் (கோத்துச்)சுடப்பட்ட கொழுத்த இறைச்சிகளாகிய பெரிய தசைத் துண்டுகளை
மாற்றி மாற்றி வாயின் (இடத்திலும் வலத்திலும்)(அத்தசைகளின்)வெப்பத்தை ஒற்றியெடுத்து

மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி
வெய்து இடை உறாஅது எய்தி முன்னர் – அகம் 203/13,14

விலங்குகள் செல்லும் நெறிகள் பின்னிக்கிடக்கும் மலையடியிற் சிறிய நெறிகளில்
தீங்கு இடையே உண்டாகாதவாறு அவர்கட்கு முன்னரே சென்று சேர்ந்து

நோயும் கைம்மிக பெரிதே மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே – நற் 236/1,2

என் காதல் நோயும் கைமீறிப் பெரிதாகிவிட்டது; உடம்பும்
நெருப்பு வெளிவிடும் வெம்மையைக்காட்டிலும் சூடானதாய் உள்ளது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *