சொல் பொருள்
வெருவு என்பதன் சொல்லிசை அளபெடை, அஞ்சு
வெருவு என்பதன் சொல்லிசை அளபெடை – அச்சம்
சொல் பொருள் விளக்கம்
வெருவு என்பதன் சொல்லிசை அளபெடை, அஞ்சு
வெருவு என்பதன் சொல்லிசை அளபெடை – அச்சம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be afraid of, be frightened
fright
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உமணர் வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம் மணல் மடுத்து உரறும் ஓசை கழனி கரும் கால் வெண்குருகு வெரூஉம் – நற் 4/7-11 உப்பு வணிகர் வெள்ளைக்கல்லான உப்பின் விலையைக் கூவிக்கூறிச்செல்வதால் ஆநிரைகளை விலக்கிப் போகும் நீண்ட வரிசையான வண்டிகள் மணலைத் தேய்த்து எழுப்பும் பேரொலியைக் கேட்டு, வயல்வெளிகளிலுள்ள கரிய காலையுடைய வெள்ளை நாரைகள் அஞ்சி நீங்கும் வெரூஉ பறை நுவலும் பரூஉ பெரும் தட கை வெருவரு செலவின் வெகுளி வேழம் – பொரு 171,172 அச்சத்தைப் பறைகள் சாற்றுவதற்குக் காரணமாகிய, பருத்த பெரிய வளைவினையுடைய கையினையும், அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை வெரூஉ பறை நுவலும் = பறை வெரூஉ நுவலும் – பறை எல்லார்க்கும் அச்சத்தைச் சாற்றுவதற்குக் காரணமாகிய – நச். – உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்