Skip to content

சொல் பொருள்

விரும்பாமல்போ, பகை, மிகு, செல்வமுண்டாகு, செறிந்திரு

சொல் பொருள் விளக்கம்

விரும்பாமல்போ, பகை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

dislike, hate, abound, flourish, be dense

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து – மலை 404,405

புலி வந்ததால், அதனை வெறுத்து ஓடிப்போன தான் (இன்னும்)விரும்புகின்ற துணையை எண்ணி,
ஆண்மான் நின்று கூப்பிடும் (அக்)காட்டை வழக்கமானபாதையில் சென்றுகடந்து,

உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும் – மலை 93

புகழ் (எங்கும்)சென்று மிகுகின்ற அவனுடைய மூதூரின் இயல்பினையும்

வெறுத்த வய வெள் ஏற்று அம் புடை திங்கள்
மறு போல் பொருந்தியவன் – கலி 103/48,49

மிகுந்த வலிமையான வெள்ளைக் காளையின் அழகிய பக்கத்தில், திங்களில் இருக்கும்
மறுவைப் போல் ஒட்டிக்கிடக்கிறவன்”;

வினை நன்று ஆதல் வெறுப்ப காட்டி – அகம் 33/1

பொருளீட்ட மேற்கொள்ளவிருக்கும் செயல் நல்லது என்பதை வெகுவாக உணர்த்தி

மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் – மலை 401

எல்லாவூர்களிலும் மேலாகும்படி செல்வமுண்டான நன்னனுடைய பழைதாகிய உயர்ந்த ஒழுக்கத்தினையுடைய
பழைய ஊர்கள்
நச்.உரை

பெயினே விடு மான் உளையின் வெறுப்ப தோன்றி
இரும் கதிர் நெல்லின் யாணரஃதே – நற் 311/1,2

மழை பெய்தால், விடுபட்ட குதிரையின் பிடரிமயிரைப் போன்று செறிந்து தலை சாய்ந்து தோன்றும்,
பெரிய கதிர்களையுடைய நெல்லின் புது அறுவடையைக் கொடுக்கும்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *