Skip to content

சொல் பொருள்

விளாம்பழம், பாடை

சொல் பொருள் விளக்கம்

விளாம்பழம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

woodapple fruit, bier

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா – திரு 37

விளவின் சிறிய தளிரைக் கிள்ளித் தெறித்துக்கொண்டு,

வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடை – நற் 24/5

விளாம்பழங்களையே உணவாகக் கொண்ட வேற்று நாட்டு அரிய வழியில்

மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில் – புறம் 181/1

மன்றத்தின்கண்ணே நிற்கப்பட்ட விளாவினது மனையிடத்து வீழ்ந்த விளாம்பழத்தை

கள்ளி போகிய களரி மருங்கில்
வெள்ளில் நிறுத்த பின்றை – புறம் 360/16,17

கள்ளிகள் ஓங்கியுள்ள பிணம்சுடு களத்தின்கண்
பாடையை நிறுத்திய பின்பு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *