Skip to content

சொல் பொருள்

இருள்தங்கு, வைகுதலுறு, மறை, விடி, வைகறைப்பொழுது,

சொல் பொருள் விளக்கம்

வைகறைப்பொழுது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

darkness remain, (dawn) that stays, set, dawn, early dawn

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தண் புலர்
வைகுறு விடியல் போகிய எருமை – அகம் 100/15,16

தண்ணென்று புலர்ந்திடும்
இருள்தங்கிய விடியற்காலத்தே போகிய எருமை
– நாட்டார் உரை

வைகுறு விடியல் இயம்பிய குரலே – புறம் 233/8

வைகுதலுற்ற விடியற்காலத்துச் சொல்லிய வார்த்தை

வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று
வைகுறு வனப்பின் தோன்றும் – நற் 163/10,11

ஆகாயத்திலே சென்ற, விளங்கிய ஒளியையுடைய, நெடிய சுடரையுடைய
கதிரினாலே இருளைப் போக்கி எழுந்து உள்ளே கொதித்து, ஆதித்தனது
பாடுசாய்கின்ற அழகுபோலத் தோன்றும்
– பின்னத்தூரார் உரை

வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று
வைகுறு வனப்பின் தோன்றும் – நற் 163/9-11

ஒளிவிளங்கும் நெட்ய சுடர்களைக் கொண்ட
கதிர்களைக் காய்ந்தபடியே வானத்தே மூழ்கிக்கிடந்த இருளினது செறிவைக்கண்டு உள்ளே கொதித்து
விடியற்காலை வேளையிலே அதனைப் போக்குவதற்கு எழுகின்ற
வைகறைப்போதின் வனப்பினோடும் கலந்து தோன்றும்
– வைகுறு – விடியல் – புலியூர்க்கேசிகன் உரை, விளக்கம்
– வைகுறு வனப்பின் தோன்றும் – appears like splendid daybreak – வைதேகி ஹெர்பெர்ட் மொழிபெயர்ப்பு

புல் இதழ் கோங்கின் மெல் இதழ் குடை பூ
வைகுறு மீனின் நினைய தோன்றி
புறவு அணிகொண்ட பூ நாறு கடத்திடை – நற் 48/3-5

புல்லிய புறவிதழையுடைய கோங்கினுடைய மெல்லிய இதழ் மிக்க குடை போன்ற மலர்கள் எல்லாம்
வைகறைபொழுதிலே விசும்பின்கண் விளங்குகின்ற மீன்களாம் எனக் கருதும்படி தோன்றாநின்று
காடெங்கும் அழகமைந்த மலர் மணம்வீசும் கண்ணெறியிலே
– பின்னத்தூரார் உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *