சொல் பொருள்
(வி) 1. எரி, 2. கொஞ்சம் கொஞ்சமாகக் குறை, 3. செழி, 4. தளிர்,
சொல் பொருள் விளக்கம்
1. எரி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
burn, diminish slowly, flourish, sprout
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எரி அகைந்து அன்ன தாமரை பழனத்து – அகம் 106/1 தீ கிளைத்து எரிந்தாற்போன்ற தாமரைப் பூக்களையுடைய வயலில் உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் – மலை 429 யானை முறித்த ஒள்ளிய தளிர்களையுடைய யாமரம் கொய் அகை முல்லை காலொடு மயங்கி – அகம் 43/9 கொய்யப்படும் தழைத்த முல்லை காற்றால் மயங்குதலின் கரி மரம் கண் அகை இளம் குழை கால் முதல் கவினி – அகம் 283/9,10 கரிந்த மரங்கள் தம்மிடம் தளிர்க்கும் இளைய குழைகள் அடிமுதல் கிளைத்து அழகுபெற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்