சொல் பொருள்
(பெ) ஒரு சங்ககாலக்கொடை வள்ளல்
சொல் பொருள் விளக்கம்
ஒரு சங்ககாலக்கொடை வள்ளல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a philanthropist of sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காவிரிபாயும் கழனிகளையுடையவர் என்பதனால், இவர் சோழநாட்டைச் சேர்ந்தவர் எனலாம். காவிரி அணையும் தாழ் நீர் படப்பை நெல் விளை கழனி அம்பர் கிழவோன் நல் அருவந்தை வாழியர் – புறம் 385/8-10 காவிரியாறு பாயும் தாழ்ந்த நிலப்பாங்கினையுடைய தோட்டங்களையும் நெல் விளையும் கழனிகளையும் உடைய அம்பர் என்னும் ஊர்க்கு உரியோனாகிய நல்ல அருவந்தை என்போன் வாழ்வானாக அகன்கண் தடாரி பாட கேட்டு அருளி வறன் யான் நீங்கல்வேண்டி என் அரை நிலம் தினக் குறைந்த சிதாஅர் களைந்து வெளியது உடீஇ என் பசி களைந்தோனே – புறம் 385/4-7 என்ற அதே பாடலின் அடிகளால் இச் சான்றோர் பெரும் வள்ளல் என அறிகிறோம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்