Skip to content

அழுந்துபடு

சொல் பொருள்

(வி) 1. நீண்டகாலமாய் இரு, 2. தொன்றுதொட்டு இரு, 3. மறைபடு,

சொல் பொருள் விளக்கம்

1. நீண்டகாலமாய் இரு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be long-standing, have continued for generations, be hidden

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய் புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்கு – நற் 97/1,2

நெடுங்காலம் இருக்கும் விழுப்புண்ணின் மெல்லிய மேல்தோலையுடைய வாய் காய்ந்துபோகாத
துன்பத்தையுடைய மார்பினில் வேலை எறிந்தது போல்

அழுந்துபட்டு இருந்த பெரும்பாண் இருக்கையும் – மது 342

நெடுங்காலம் அடிப்பட்டிருந்த பெரும்பாணர்களின் குடியிருப்பினையும்
அழுந்துபடுதல் – தலைமுறை தலைமுறையாக இருந்து வாழ்தல் – பொ.வே.சோ.விளக்கம்

மா கடல் முகந்து மணி நிறத்து அருவி
தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய்
மலை இமைப்பது போல் மின்னி
சிலை வல் ஏற்றொடு செறிந்த இ மழைக்கே – நற் 112/6-9

கரிய கடலின் நீரை முகந்துகொண்டு, நீலமணியின் நிறத்தைக் கொண்ட அருவியிலிருந்து
கீழே விழும் நீர் அகன்ற இடமெல்லாம் மறைபடுமாறு பரவ,
விட்டுவிட்டு ஒளிரும் மின்னலால் மலையே இமைப்பதுபோல் மின்னி,
ஒலிக்கின்ற வலிய இடியுடன் செறிவாகக் கலந்துவந்த இந்த மழைக்கு –
– பின்னத்தூரார் உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *