ஆறு என்பது வழி, பாதை
1. சொல் பொருள்
ஊடு நீந்தியும் ஒரமாக நடந்தும் செல்லும் வழிகளாயிருந்தமையின், வழி ‘ஆறு’ எனப் பட்டது.
1 (வி) 1. சூடுதணி, 2. அமைதியுடன் இரு
2. (பெ) 1. வழி, பாதை, 2. எண் ஆறு, 3. வழி, உபாயம், 4. விதம்
2. சொல் பொருள் விளக்கம்
(1) நிலமெங்கும் ஒரே சோலையாயிருந்த காலத்தில் இடையிடை யோடும் ஆறுகளே, ஊடு நீந்தியும் ஒரமாக நடந்தும் செல்லும் வழிகளாயிருந்தமையின், வழி ‘ஆறு’ எனப் பட்டது. (சொல். கட். 18)
(2) நதி, வழி. இது முதனிலை நீண்ட தொழிலாகு பெயர். நதியானது தரையை அறுத்துக்கொண்டும் காடு முதலா யினவற்றை ஊடறுத்துக் கொண்டும் செல்லுதலின் இப்பெயர்த்து ஆயிற்று. கல்லுங் கரடுமா யிருந்த நிலத்தை வெட்டியறுத்துத் திருத்தி மக்கள் நடப்பதற்கு ஏற்றதாக்குதலின் வழியாயிற்று. (தமிழ் விய. 56)
சொற்பொருள் நுண்மை விளக்கம் (ஆன்றவிந்தடங்கிய சான்றோர்).
(3) வழி ; பலர் நடந்து நடந்து அறுபட்டுப் பண்பட்ட வழி. (திருக்குறள் விரிவுரை. 413.)
(4) நீர் நிறைந்து மண்ணை அறுத்து ஓடுவதைக் கண்டு ஆறு எனப் பெயர் வைத்தது எளியது; நிலத்தில் அறுத்தால் போல் அமைந்த பாதையைக் கண்டு வழி எனப் பெயர் வைத்ததும் எளிதே. ஆயின் ஒருவன் வாழும் வாழ்க்கையின் போக்கை உணர்ந்து அதனை (நல்லவழி என்னும் பொருளில்) நல்ல ஆறு என்று வழங்குமிடத்தில் அருமை புலனாகின்றது.
(மு. வ. மொழிவரலாறு. 92.)
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
get cold, be calm, way, path, number six, river, means, device, manner, mode
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப – அகம் 71/6
உலையில் காய்ந்து சூடுதணியும் பொன்னின் நிறம்போல செக்கர் வானம் பூத்து நிற்க
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர் யாம் என் இதற்படலே – அகம் 95/14,15
நமது களவொழுக்கத்தினை உணர்ந்துவைத்து, அமைதியுற்றிருக்கும் கொள்கையினையுடைய
நம் அன்னை முன் யாம் இக் களவொழுக்கத்திற்பட்டு ஒழுகல் எங்ஙனம் இயலும்?
ஆறிய கற்பின் அடங்கிய சாயல் – பதி 16/10
சீற்றமடையாது தணிந்தொழுகும் அறக் கற்பும், அடக்கம் பொருந்திய மென்மையும்
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற – மலை 284
இடையூறு நிரம்பிய வழியில் அவர் முந்திச்செல்ல
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
ஆறு என்று, ஏழு என்று, எட்டு என்று, ஒன்பது என்று
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 30
ஆறு கிடந்ததைப் போல அகன்ற நெடிய தெருவில்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் – புறம் 183/7
அறிவுள்ளவர் சொல்லும் வழியில் அரசும் செல்லும்
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ – நற் 244/7
தணியும் விதம் இது எனச் சொல்லுதல் ஒன்றோ?
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை – திரு 180
விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி – திரு 123
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ – திரு 255
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி – பொரு 93
ஆறு செல் வம்பலர் காய் பசி தீர – பெரும் 365
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 30
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற – மலை 284
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த – நற் 2/3
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளு-தொறும் – நற் 154/11
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ – நற் 244/7
ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து – நற் 318/7
வரும் ஆறு ஈது அவண் மறவாதீமே – நற் 323/11
ஆறு செல் மாக்கள் புள் கொள பொருந்தும் – குறு 140/2
ஆறு செல் மாக்கள் சேக்கும் – குறு 253/7
சேய் ஆறு சென்று துனை பரி அசாவாது – குறு 269/1
மாறு நின்று எதிர்ந்த ஆறு செல் வம்பலர் – குறு 297/3
ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று – குறு 331/2
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும் – குறு 350/6
சேய் ஆறு செல்வாம் ஆயின் இடர் இன்று – குறு 400/1
ஆரிடை செல்வோர் ஆறு நனி வெரூஉம் – ஐங் 311/2
கூறு-மின் வாழியோ ஆறு செல் மாக்கள் – ஐங் 385/4
ஆறு வனப்பு எய்த அலர் தாயினவே – ஐங் 483/1
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் – பதி 24/7
பிறிது ஆறு செல்-மதி சினம் கெழு குருசில் – பதி 53/14
ஆறு முட்டு-உறாஅது அறம் புரிந்து ஒழுகும் – பதி 59/16
ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும் – பதி 60/7
என்றனிர் ஆயின் ஆறு செல் வம்பலீர் – பதி 77/2
நூறுஆயிரம் கை ஆறு அறி கடவுள் – பரி 3/43
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
வேறுவேறு உருவின் இஆறு இரு கை கொண்டு – பரி 5/68
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும் – பரி 8/98
தாழ்வு-உழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப – பரி 11/110
அறு முகத்து ஆறுஇரு தோளால் வென்றி – பரி 14/21
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று – பரி 17/27
இடை நிலம் யாம் ஏத்தும் ஆறு/குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும் – பரி 19/37,38
ஆறுஇரு தோளவை அறு முகம் விரித்தவை – பரி 21/67
அந்தணர் தோயலர் ஆறு/வையை தேம் மேவ வழுவழுப்பு-உற்று என – பரி 24/61,62
ஐயர் வாய்பூசுறார் ஆறு/விரைபு இரை விரை துறை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல் – பரி 24/63,64
தான் தோன்றாது இ வையை ஆறு/மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும் – பரி 24/87,88
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து – கலி 1/1
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆரிடை – கலி 2/8
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அரும் சுரம் – கலி 5/3
அலவு-உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி – கலி 10/5
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர் – கலி 20/12
ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து – கலி 21/3
ஆறு இன்றி பொருள் வெஃகி அகன்ற நாட்டு உறைபவர் – கலி 26/20
ஆறு விலங்கி தெருவின்-கண் நின்று ஒருவன் – கலி 60/23
ஒருவன் சாம் ஆறு எளிது என்பாம் மற்று – கலி 60/26
அச்சு ஆறு ஆக உணரிய வருபவன் – கலி 75/20
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது – கலி 89/6
ஆறு மயங்கினை போறி நீ வந்து ஆங்கே – கலி 95/3
மாண்இழை ஆறு ஆக சாறு – கலி 102/14
ஓஒ அஃது அறும் ஆறு/ஆயர்மகன் ஆயின் ஆயமகள் நீ ஆயின் – கலி 107/18,19
சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப – கலி 111/20
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்து செல் – கலி 113/3
தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன்-கொலோ – கலி 138/7
நெஞ்சு ஆறு கொண்டாள் அதன் கொண்டும் துஞ்சேன் – கலி 139/7
ஏமராது ஏமரா ஆறு/கனை இருள் வானம் கடல் முகந்து என் மேல் – கலி 145/54,55
ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய – கலி 147/1
வெரு வந்த ஆறு என்னார் விழு பொருட்கு அகன்றவர் – கலி 150/12
ஆறு கடி கொள்ளும் அரும் சுரம் பணை தோள் – அகம் 65/17
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப – அகம் 71/6
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி – அகம் 73/9
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க – அகம் 95/8
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை – அகம் 119/5
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை – அகம் 121/12
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட – அகம் 137/1
ஆறு செல் வம்பலர் உயிர் செல பெயர்ப்பின் – அகம் 175/4
தனியை வந்த ஆறு நினைந்து அல்கலும் – அகம் 182/11
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி – அகம் 239/7
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி – அகம் 247/10
வேறுவேறு கவலைய ஆறு பரிந்து அலறி – அகம் 249/17
எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின் – அகம் 257/4
ஆறு செல் வம்பலர் வருதிறம் காண்-மார் – அகம் 263/6
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும் – அகம் 277/11
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி – அகம் 288/10
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும் – அகம் 295/12
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் – அகம் 297/10
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும் – அகம் 313/3
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் – அகம் 343/8
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த – அகம் 363/11
ஆறு நனி அறிந்தன்றோ இலெனே தாஅய் – அகம் 384/4
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற – அகம் 389/18
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய – அகம் 393/3
அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின் – புறம் 9/6
அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர – புறம் 161/9
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் – புறம் 166/4
ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும் – புறம் 174/21
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் – புறம் 183/7
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே – புறம் 185/3
பனை கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம் – நற் 126/6
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே – கலி 9/24
ஆண்டுஆண்டு உறைதலும் அறிந்த ஆறே/ஆண்டுஆண்டு ஆயினும் ஆக காண்தக – திரு 249,250
அரும் பொறி உடைய ஆறே நள்ளிருள் – மலை 195
குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே – நற் 9/12
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே – நற் 158/9
நாம் வெம் காதலர் சென்ற ஆறே – நற் 186/10
ஏமம் ஆகும் மலை முதல் ஆறே – நற் 192/12
நெடு_நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறே – நற் 235/10
உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே – நற் 255/11
நிறை அடு காமம் நீந்தும் ஆறே – நற் 369/11
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே/அது மற்று அவலம் கொள்ளாது – குறு 12/4,5
அன்பின தோழி அவர் சென்ற ஆறே – குறு 37/4
முலை இடை முனிநர் சென்ற ஆறே – குறு 39/4
இன் துயில் முனிநர் சென்ற ஆறே – குறு 213/7
நாம் வெம் காதலர் சென்ற ஆறே – குறு 255/8
தான் நாணினன் இஃது ஆகா ஆறே – குறு 265/8
நெடு மூது இடைய நீர் இல் ஆறே – குறு 283/8
உயர் வரை நாடனொடு பெயரும் ஆறே – குறு 343/7
அலர் ஆகின்று அவர் அருளும் ஆறே – ஐங் 132/3
தோள் இடை முனிநர் சென்ற ஆறே – ஐங் 314/5
இன்னாது என்ப அவர் சென்ற ஆறே – ஐங் 331/5
நீடி இவண் வருநர் சென்ற ஆறே – ஐங் 335/5
நணிய ஆயின சுரத்து இடை ஆறே – ஐங் 359/5
நன்றே காதலர் சென்ற ஆறே/அணி நிற இரும் பொறை மீமிசை – ஐங் 431/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/சுடு பொன் அன்ன கொன்றை சூடி – ஐங் 432/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/நீர் பட எழிலி வீசும் – ஐங் 433/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/மறி உடை மான் பிணை உகள – ஐங் 434/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/நிலன் அணி நெய்தல் மலர – ஐங் 435/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/நன் பொன் அன்ன சுடர் இணர் – ஐங் 436/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/ஆலி தண் மழை தலைஇய – ஐங் 437/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/பைம் புதல் பல் பூ மலர – ஐங் 438/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/குருந்த கண்ணி கோவலர் – ஐங் 439/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/தண் பெயல் அளித்த பொழுதின் – ஐங் 440/1,2
ஆறே அ அனைத்து அன்றியும் ஞாலத்து – பதி 13/22
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே – அகம் 15/19
பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே – அகம் 59/18
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே – அகம் 67/18
ஆறே அரு மரபினவே யாறே – அகம் 72/7
மை தோய் சிமைய மலை முதல் ஆறே – அகம் 119/20
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே – அகம் 148/14
இரவு பெயல் பொழிந்த ஈர்ம் தண் ஆறே – அகம் 222/15
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு – அகம் 283/8
பெரும் கல் வைப்பின் மலை முதல் ஆறே – அகம் 307/15
கடி கொள வழங்கார் ஆறே ஆயிடை – அகம் 362/6
யான் அறிகுவன் அது கொள்ளும் ஆறே/சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி – புறம் 109/14,15
வண்டு மேம்படூஉம் இ வற நிலை ஆறே/பல் ஆ திரள் நிரை பெயர்தர பெயர்தந்து – புறம் 263/4,5
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்