சொல் பொருள்
நிலவளம் சிறந்தவை குறிஞ்சியும் முல்லையும் மருதமுமேயாகும். நெய்தல் நீர்வளத்தாற் சிறந்தது. இம் மூன்றனுள் முல்லை ஏனை இரண்டற்கும் இடை நிற்றலின் முல்லை நிலத்து ஆயரை இடையர் என்பர். (ஐங்குறு. முல்லை. ஒளவை. சு.து)
ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு பால் தயிர் முதலியவற்றை விற்பனை செய்து வாழ்ந்து வந்த மக்கள் முல்லை நிலத்தார் – இடை நிலத்தார் – இடையர் எனப்பட்டனர்.
சொல் பொருள் விளக்கம்
(1) நிலவளம் சிறந்தவை குறிஞ்சியும் முல்லையும் மருதமுமேயாகும். நெய்தல் நீர்வளத்தாற் சிறந்தது. இம் மூன்றனுள் முல்லை ஏனை இரண்டற்கும் இடை நிற்றலின் முல்லை நிலத்து ஆயரை இடையர் என்பர். (ஐங்குறு. முல்லை. ஒளவை. சு.து)
(2) தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாகப் பகுக்கப்பட்டிருந்தது. இவற்றுள் இடைப்பட்டது முல்லை நிலம். அந்நிலத்தில் பசும் புல்வெளிகள் உண்டு. அங்கு ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு பால் தயிர் முதலியவற்றை விற்பனை செய்து வாழ்ந்து வந்த மக்கள் முல்லை நிலத்தார் – இடை நிலத்தார் – இடையர் எனப்பட்டனர். இது நிலம் பற்றிய பெயர். (தமிழர் நாகரிகமும் பண்பாடும். 12.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்