Skip to content

சொல் பொருள்

(பெ) சேர மன்னன்,

சொல் பொருள் விளக்கம்

சேர மன்னன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

The CErA king who is said to have fed the armies of the PAndavas
in the Mahabharata war.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல்
பாடி சென்ற பரிசிலர் போல – அகம் 65/5,6

பிறர் நாட்டினை வென்று, தன் நாட்டினை விரிவாக்கிய உதியஞ்சேரலாதனைப்
பாடிச் செல்லும்பரிசிலர் போல.

மற படை குதிரை மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை
முதியர் பேணிய உதியஞ்சேரல்
பெரும் சோறு கொடுத்த ஞான்றை இரும் பல்
கூளி சுற்றம் குழீஇ இருந்தாங்கு – அகம் 233/6-10

வீரம் பொருந்திய குதிரைப்படைகளுடன் புறக்கிடாத வலியையுடைய
மேலுலகத்தை அடைந்த கெடாத நல்ல புகழினையுடைய
முன்னோர்கட்குத் தென்புலக் கடனாற்றிய உதியன் சேரலாதன் என்னும் மன்னன்
அவர்கட்குப் பலியாகப் பெருஞ்சோறு படைத்திட்ட காலத்தே, கரிய பலவாய
பேய்ச்சுற்றங்கள் அதனை உண்பதற்குக் கூடியிருந்தாற் போன்ற
– நாட்டார் உரை.

ஈரைம்பதின்மரும் பொருது களத்து ஒழிய
பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் – புறம் 2/15,16

என்ற முரஞ்சியூர் முடிநாகனாரின் புறப்பாடல் வரிகளால் இவன் மகாபாரதப் போரின்போது பாண்டவர்க்குத்
துணையாக நின்று அவர் படைக்கு உணவளித்தான் என்று தெரிய வருகிறது. அதனால் இவன்
சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனப் பெயர் பெற்றான்.
எனவே மேற்குறிப்பிட்ட அகப்பாடலிலும் இவன் பாண்டவர் படைக்கு உணவளித்த செய்திதான்
கூறப்படுகிறது எனக் கொள்ளலாம். ஆனால் இவ்வுதியன் வேறானவன் எனக் கொள்வார் நாட்டார்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *