Skip to content

சொல் பொருள்

(வி) 1. தீவிரமாகச் செயல்படு, 2. ஆடுகின்ற ஊஞ்சலை வேகமாக ஆட்டிவிடு, 3. தூண்டப்படு, 4. உயர்த்திவிடு,

2. (பெ) 1. குறிதப்புதல், 2. ஊக்கம், உற்சாகம், மனஎழுச்சி,

சொல் பொருள் விளக்கம்

1. தீவிரமாகச் செயல்படு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

act with energy, swing rapidly, spur, lift, missing the mark, zeal, fervour

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நோக்கினர் செகுக்கும் காளை ஊக்கி
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின் – புறம் 302/8,9

தன்னைப் பகைத்துப் பார்க்கும் பகைவரைக் கொல்லும் காளையாகிய அவன் மனஎழுச்சிகொண்டு
தன் வேலால்கொன்ற களிறுகளை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்க்குமிடத்து

ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை
ஐய சிறிது என்னை ஊக்கி என கூற – கலி 37/15

ஊசலில் ஆடிக்கொண்டிருக்க, ஒரு சமயம் அங்கு வந்தவனை,
“ஐயனே! சிறிது என்னை வேகமாக ஆட்டிவிடு” என்று கூற,

நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை – ஐங் 377/1

நீர் வேட்கையால் தூண்டப்பட்ட வருத்தங்கொண்ட யானை

வாழை மென் தோடு வார்பு_உறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின் – நற் 400/1,2

வாழையின் மெல்லிய இலை நீண்டு தாழ்ந்திருக்க,அதனை உயர்த்தும்
நெற்பயிர் விளையும் கழனியிலுள்ள நேரான இடம் பொருந்திய வயலில்

ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர் – மது 647

ஊர்க் காவலர்கள், குறிதப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்;

உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை – அகம் 29/19

நினைப்போரை நடுங்கச்செய்யும் ஊக்கத்தை ஒழிக்கும் காட்டினிலே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *