சொல் பொருள்
(வி) 1. எம்பு, உயர்த்து, 2. குழலாம் பீய்ச்சு
எக்கு என்பது இடுப்பு என்னும் பொருளில் அகத்தீசு வர வட்டாரத்தின் வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
ஒக்கலை என்பது இடுப்பு என்னும் பொருளில் நாலாயிரப் பனுவலில் இடம் பெற்றுள்ளது. சுருங்கிய இடுப்பு அல்கு, அஃகு, அக்கு என் றாகும். அகர எகரத் திரிபாகவோ, ஒகர எகரத் திரிபாகவோ இஃது இருக்க வேண்டும். ஒக்கல் என்பது இடுப்பு என்னும் பொருளில் வருதல் நெல்லை மாவட்ட வழக்கு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stretch up, squirt
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்க – பரி 16/45 காற்றால் எடுக்கப்பட்ட காட்டுமூங்கில் எம்பி நிமிர்ந்து உயர்ந்து தாக்கியதால் துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும் – பரி 11/57 அறுக்கப்பட்ட சொரசொரப்பான கொம்பில் நீரைப் பாய்ச்சி வீசுவோரும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்