சொல் பொருள்
(வி) 1. மகிழ், இன்பமடை, 2. ஆசைப்படு, 3. ஏமாந்துபோ, 4. கலக்கமுறு
சொல் பொருள் விளக்கம்
மகிழ், இன்பமடை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rejoice, desire, get disappointed, be perplexed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின் பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க – பரி 7/85 உன்னால் கிடைக்கும் இன்பமான பயனைப் பாடி, துன்பம் நீங்கப்பெற்று மகிழ்வோமாக அருந்த ஏமாந்த நெஞ்சம் – புறம் 101/9 உண்ண ஆசைப்பட்ட நெஞ்சே! பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு அறியாது ஏறிய மடவோன் போல ஏமாந்தன்று இ உலகம் – குறு 273/5-7 பெரிய தேனிறால் தங்கியிருக்கும் மலைப்பக்கத்தில், பழைய கண்ணேணியின்மேல் அறியாமல் ஏறிய அறிவிலியைப் போல ஏமாந்தது இந்த உலகம் நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து – மது 575 நெஞ்சு கலக்கமுறும்படி இனிய கூட்டத்தைக் கைவிட்டு,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்