Skip to content

சொல் பொருள்

(வி.எ) ஒருவி என்பதன் விகாரம், ஒருவுதல் – 1. துறத்தல், கைவிடுதல், 2. கடத்தல், 3. ஒதுங்கு, 4. நீங்குதல், 5. தப்புதல்,

சொல் பொருள் விளக்கம்

ஒருவி என்பதன் விகாரம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

renounce, cross, passover, stand aside, leaving, parting, escape

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும் – மது 498,499

பழியை வெறுத்தொதுக்கி உயர்ந்து, பரவுகின்ற புகழால் நிறைவுற்ற
தலைமை அமைந்த காவிதிப்பட்டம் பெற்றாரும்

வறிது நெறி ஒரீஇ வலம் செயா கழி-மின் – மலை 202

சற்றே அவ்வழியைக் கடந்த பின்னர் வலப்பக்கமாகவே செல்லுங்கள்

வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ
யாரையோ என்று இகந்து நின்றதுவே – நற் 250/9,10

வெருளும் பெண்மானைப் போல் ஒதுங்கிக்கொண்டு,
“யாரையா நீர்” என்று தள்ளி நின்ற கோலத்தை எண்ணி

மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசி இகந்து ஒரீஇ
பூத்தன்று பெரும நீ காத்த நாடே – பதி 13/26-28

மழை வேண்டி நிற்கும் இடங்களில் பெருமழை பொழிய,
நோயுடன் பசியும் இல்லையாக நீங்கி,
வளம் சிறந்து விளங்குகிறது, பெருமானே! நீ காத்த நாடு.

கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ
தன் அகம் புக்க குறு நடை புறவின் – புறம் 43/5,6

கூரிய நகங்களைக் கொண்ட பருந்தின் தாக்குதலைக் கருதி அதனின்றும் தப்பி
தன் இடத்தை அடைந்த குறிய நடையையுடைய புறாவின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *