Skip to content

சொல் பொருள்

(வி) 1. எடுத்துச் செல், கொண்டுசெல், 2. செலுத்து, 3. தப்பித்துப்போ, 4. விரட்டு, 5. போக்கு, இல்லாமல்போ, 6. இழுத்துச் செல்

2. (இ.சொ) விரைவைக் குறிக்கும் ஓர் ஒலிக்குறிப்பு,

சொல் பொருள் விளக்கம்

எடுத்துச் செல், கொண்டுசெல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

take with, carry, launch as a boat, escape, drive away, get wiped out, drag along as a flood, hey, an onomatopoeic expression

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த – அகம் 310/14

உப்பினை எடுத்துச் செல்லும் உப்பு வணிகரின் வண்டித்தொடருடன் வந்த

கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய – அகம் 255/6,7

கரை உயர்ந்த செறிந்த மணலையுடைய அகன்ற துறையில், நாவாய் ஓட்டுபவன்
மாடத்தின் மீது உள்ள ஒள்ளிய விளக்கினால் இடமறிந்து செலுத்த

ஓடி ஒளித்து ஒய்ய போவாள் நிலை காண்-மின் – பரி 20/39

ஓடி ஒளித்துத் தப்பித்துப்போவாளின் நிலையைப் பாருங்கள்,

மருதம் சான்ற மலர் தலை விளை வயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் – பதி 73/7,8

மருத வளம் அமைந்த விரிந்த இடத்தையுடைய விளைநிலங்களாகிய
வயல்களுக்குள் நாரைகளை விரட்டும் மகளிர்

வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும்
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு – அகம் 143/4,5

வாடிய பல அகன்ற இலைகள் மேல் காற்றினால் உதிர்ந்து ஒன்றும் இல்லாமற்போன
தேக்கு மரங்கள் நிறைந்த பக்க மலைகளில்

கன்று கால் ஒய்யும் கடும் சுழி நீத்தம் – அகம் 68/17

யானைக் கன்றின் கால்களை இழுத்துச் செல்லும் கடிய சுழிகளையுடைய வெள்ளத்தில்

திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்
வளி முனை பூளையின் ஒய்யென்று அலறிய
கெடுமான் இன நிலை – அகம் 199/9-11

உறுதி பொருந்திய பற்களையுடைய செந்நாய் தாக்கியதால்
காற்றின் முன் பூளைப் பூவைப் போல் ஒய்யென்று அலறி ஓடிய
காணாமற்போன தன் இனமாகிய மான் கூட்டத்தை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *