கலை என்பது ஒரு வகை குரங்கு
1. சொல் பொருள்
1. (வி) குலை,
2. (பெ) 1. முசு என்ற குரங்கின் ஆண், 2. உழை மானின் ஆண், 3. மேகலை,
பார்க்க குரங்கு மந்தி கடுவன் முசு ஊகம் பெருங்கிளை கணக்கலை கிளை
2. சொல் பொருள் விளக்கம்
கலையென்ற பெயர் உழையில் ஆண் மானிற்கு மட்டுமே வழங்கி வந்திருக்கின்றது
இரலை இன மான்களின் கொம்புகள் உள்துளை அற்றவை. துளையற்று உள்ளே கெட்டியாக இருக்கும். மற்றும் இரலைஇன மான்களின் கொம்பு கீழே வீழ்ந்து புதிய கொம்பு திரும்பவும் முளைப்பதில்லை. கலைமானினத்தின் கொம்புகள் உள்துளையுடையவை. கீழே வீழ்ந்து புதிய கொம்பு திரும்பவும் முளைக்கும். இரலை இன மான்களின் கொம்பில் கிளைகள் இல்லை. கலைமானின் கொம்புகளில் கிளைகள் உண்டு. இந்த அடிப்படை வேற்றுமையைக் கொண்டு மான் வகைகளை இரலை இனமா கலையினமா என்று எளிதில் பிரித்துவிடலாம். (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 85.)
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
disperse, derange, male langur, male black monkey, stag, buck, Woman’s girdle
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
குண்டு நீர் பைம் சுனை பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே – குறு 291/6-8
ஆழமான நீரையுடைய பசிய சுனையில் பூத்த குவளையின்
வண்டுகள் அடிக்கடி மொய்க்கும் பல இதழ்கள் கலைந்து
குளிர்ந்த மழைத்துளியை ஏற்றுக்கொண்ட மலர்களைப் போலிருப்பன
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின் – பெரும் 496
முசுக்கலைகள் பாய்ந்து உதிர்த்த மலர்கள் சிந்தின காட்டினையும் உடைய
புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து – மலை 404,405
புலி வந்ததால், (தன்னைக்)கைவிட்டு ஓடிப்போன தான் (இன்னும்)விரும்புகின்ற துணையை எண்ணி,
ஆண்மான் நின்று கூப்பிடும் (அக்)காட்டை வழக்கமான பாதையில் சென்று கடந்து,
பல் கலை சில் பூ கலிங்கத்தள் – கலி 56/11
பல இழைகள் கொண்ட மேகலையும், சிறிய பூத்தொழில் நிரம்பிய ஆடையும் உடைய இவள்
மா முக முசு கலை பனிப்ப பூ நுதல் – திரு 303
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின் – பெரும் 496
கலை தாய உயர் சிமையத்து – மது 332
கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின் – மலை 292
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை – மலை 315
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து – மலை 405
கலை ஒழி பிணையின் கலங்கி மாறி – நற் 37/6
இன் முசு பெரும் கலை நன் மேயல் ஆரும் – நற் 119/5
பன் மலர் கான்யாற்று உம்பர் கரும் கலை/கடும்பு ஆட்டு வருடையொடு தாவுவன உகளும் – நற் 119/6,7
அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை/வீளை அம்பின் வில்லோர் பெருமகன் – நற் 265/2,3
கரும் கண் தா கலை பெரும்பிறிது உற்று என – குறு 69/1
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி – குறு 90/4
மை பட்டு அன்ன மா முக முசு கலை/ஆற்ற பாயா தப்பல் ஏற்ற – குறு 121/2,3
பலவின் இரும் சினை கலை பாய்ந்து உகளினும் – குறு 153/2
கவை தலை முது கலை காலின் ஒற்றி – குறு 213/2
சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி – குறு 272/5
கலை கை தொட்ட கமழ் சுளை பெரும் பழம் – குறு 342/1
பலவில் சேர்ந்த பழம் ஆர் இன கலை/சிலை வில் கானவன் செம் தொடை வெரீஇ – குறு 385/1,2
புலி கோள் பிழைத்த கவை கோட்டு முது கலை/மான் பிணை அணைதர ஆண் குரல் விளிக்கும் – ஐங் 373/2,3
தன் நிழலை கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே – கலி 11/17
பல் கலை சில் பூ கலிங்கத்தள் ஈங்கு இது ஓர் – கலி 56/11
ஆய் சுளை பலவின் மேய் கலை உதிர்த்த – அகம் 7/20
அமை கண் விடு நொடி கண கலை அகற்றும் – அகம் 47/7
கண கலை இகுக்கும் கடும் குரல் தூம்பொடு – அகம் 82/5
கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறி கலை/வறன்-உறல் அம் கோடு உதிர வலம் கடந்து – அகம் 97/1,2
கண கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் – அகம் 112/14
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண் – அகம் 129/5
கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை – அகம் 141/27
கலைமான் தலையின் முதன்முதல் கவர்த்த – அகம் 151/7
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ – அகம் 182/14
தெள் அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை/புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண் – அகம் 184/11,12
மேக்கு எழு பெரும் சினை ஏறி கண கலை/கூப்பிடூஉ உகளும் குன்றக சிறு நெறி – அகம் 205/21,22
தாஅம் பட்ட தனி முதிர் பெரும் கலை/புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை – அகம் 241/10,11
அறு கோட்டு எழில் கலை அறு கயம் நோக்கி – அகம் 353/12
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை/அறல் அவிர்ந்து அன்ன தேர் நசைஇ ஓடி – அகம் 395/8,9
அறு மருப்பு எழில் கலை புலி-பால் பட்டு என – புறம் 23/18
பயில் இரும் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும் – புறம் 116/11
புழல் தலை புகர் கலை உருட்டி உரல் தலை – புறம் 152/3
வன் கலை தெவிட்டும் அரும் சுரம் இறந்தோர்க்கு – புறம் 161/11
புல புல்வாய் கலை பச்சை – புறம் 166/11
கலை உண கிழிந்த முழவு மருள் பெரும் பழம் – புறம் 236/1
தீர் தொழில் தனி கலை திளைத்து விளையாட – புறம் 320/5
இரும் கலை ஓர்ப்ப இசைஇ காண்வர – புறம் 374/7
காடு தேர் மட பிணை அலற கலையின்/ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை – அகம் 285/5,6
கலையும் கொள்ளா ஆக பலவும் – புறம் 116/12
கெடு மான்இன நிரை தரீஇய கலையே/கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் – அகம் 199/11,12
கணவன் எழுதலும் அஞ்சி கலையே/பிணை-வயின் தீர்தலும் அஞ்சி யாவதும் – புறம் 320/7,8
கலையொடு திளைக்கும் வரை_அக நாடன் – நற் 334/5
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்