Skip to content

சொல் பொருள்

(வி) 1. தோளில் காவடித்தண்டால் சும, 2. தோளில் சும,

2.(பெ) சோலை

சொல் பொருள் விளக்கம்

தோளில் காவடித்தண்டால் சும, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

carry on the shoulder, a pole with a weight at each end, carry on shoulder, grove

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காவினெம் கலனே சுருக்கினெம் கல பை – புறம் 206/10

எம் கலன்களைத் தோள்தண்டில் தூக்கிவைத்தோம், அந்தப் பைகளின் வாயைச் சுருக்குக் கயிறால் மூடினோம்

ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை
வீழ் காவு ஓலை சூழ் சிறை யாத்த – நற் 354/3

ஆடி அசையும் அடிமரத்தை வெட்டியதால், நெடிய கரிய பனைமரத்திலிருந்து விழுந்ததால் தோளில் சுமந்துகொண்டு சென்ற ஓலையால் சுற்றிலும் வேலியைக் கட்டின

மாவும் களிறும் மணி அணி வேசரி
காவு நிறைய கரை நெரிபு ஈண்டி – பரி 22/25

குதிரைகளும், களிறுகளும், மணிகள் அணிந்த கோவேறு கழுதைகளும் ஆற்றங்கரைச் சோலை நிறையவும், கரையையும் நெருக்கமாக வந்து கூடி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *