Skip to content

சொல் பொருள்

(பெ) 1. குருக்கத்தி : பார்க்க : குருக்கத்தி, 2. நாரை, 3. துருத்தி வைத்து ஊதும் கொல்லனின் உலைமூக்கு,

சொல் பொருள் விளக்கம்

குருக்கத்தி : பார்க்க : குருக்கத்தி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

heron

Hole in the centre of the smith’s forge for the nozzle of the bellows;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குறும் கால் காஞ்சி சுற்றிய நெடும் கொடி
பாசிலை குருகின் புன் புற வரி பூ – பெரும் 375,376

குறிய காலினையுடைய காஞ்சிமரத்தைச் சூழ்ந்த நெடிய கொடியினையும், 375
பசிய இலையினையும் உடைய குருக்கத்தியின் புற்கென்ற புறத்தினையும் வரிகளையும் உடைய பூக்கள்

போது அவிழ்
புது மணல் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் – நற் 74/6-9

மொட்டுகள் மலர்கின்ற,
புதுமணற்பரப்பைக் கொண்ட கானலில் உள்ள புன்னை மரத்தின் நுண்ணிய தாதுக்கள்
கிழக்கிலிருந்து வீசும் காற்று வந்து மோதும்போதெல்லாம், நாரையின்
வெள்ளையான முதுகில் மொய்ப்பதுபோல் உதிர்க்கும் தெளிந்த கடற்கரையிலுள்ள

புலி பகை வென்ற புண் கூர் யானை
கல்_அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்
குருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கி – அகம் 202/3-6

புலியாக பகையை வென்ற புண் மிகுந்த யானை
கற்களைஇடத்தே கொண்ட மலைச் சரிவில் தன் துதிக்கையைத் தூக்கிப் பெருமூச்சுவிடுவதால்
நல்ல கொத்துக்களையுடைய நறுமணமுள்ள பூக்கள், கொல்லனின்
மிதித்து ஊதும் உலையின் மூக்கருகே தெறித்து எழும் தீப்பொறி போலப் பொங்கி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *