Skip to content
கெழீஇ

கெழீஇ என்பதன் பொருள்நிறை, மிகு, நட்புக்கொள், சேர், பொருந்து, தழுவு

1. சொல் பொருள் விளக்கம்

(வி.எ) கெழுவி என்பதன் மரூஉ, நிறை, மிகு, நட்புக்கொள், சேர், பொருந்து, தழுவு

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

be abundant, full, get friendly, unite, join, embrace

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பதி எழல் அறியா பழம் குடி கெழீஇ
வியல் இடம் பெறாஅ விழு பெரு நியமத்து – மலை 479,480

ஊரினின்றும் குடிபெயர்தலை அறியாத பழமையான குடிமக்கள் நிறைந்துவாழும், 
அகன்றதாயினும் இடம்போதாத சிறந்த பெரிய கடைத்தெருவினையுடைய,

நும் இல் போல நில்லாது புக்கு
கிழவிர் போல கேளாது கெழீஇ
சேண் புலம்பு அகல இனிய கூறி – மலை 165-167

உம்முடைய (சொந்த)வீடு போல (வாசலில்)நிற்காமல் உள்ளே சென்று, 165 உரிமையுடையவர் போலக் கேட்காமலேயே (அவருடன்)நட்புரிமை கொள்ள, தொலைவிலிருந்து வந்த உம் வருத்தம் நீங்க இனிய மொழிகள் கூறி,

படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்
கடை கால்யாத்த பல் குடி கெழீஇ - பெரும் 399,400


இரும்பு கவர்வு-உற்றன பெரும் புன வரகே
பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல்		115  - மலை 114


மான விறல் வேள் வயிரியம் எனினே
நும் இல் போல நில்லாது புக்கு			165
கிழவிர் போல கேளாது கெழீஇ
சேண் புலம்பு அகல இனிய கூறி - மலை 166,167


காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின்
யாணர் ஒரு கரை கொண்டனிர் கழி-மின்
நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்
பதி எழல் அறியா பழம் குடி கெழீஇ - மலை 479,480


நல்கூர் பெண்டின் சில் வளை குறு_மகள்
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா			10
நயன் இல் மாக்களொடு கெழீஇ
பயன் இன்று அம்ம இ வேந்து உடை அவையே - நற் 90/11,12

63 பாட்டு 63
பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே
பணியா உள்ளமொடு அணி வர கெழீஇ
நட்டோர்க்கு அல்லது கண் அஞ்சலையே - பதி 63/2,3

உணர்த்த உணரா ஒள் இழை மாதரை
புணர்த்திய இச்சத்து பெருக்கத்தின் துனைந்து
சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ
பழன உழவர் பாய் புனல் பரத்தந்து - பரி  7/38,39

நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே		20
அறு முகத்து ஆறு_இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளி பூ நயந்தோயே
கெழீஇ கேளிர் சுற்ற நின்னை
எழீஇ பாடும் பாட்டு அமர்ந்தோயே -  பரி 14/23

நலம் கவளம் கொள்ளும் நகை முக வேழத்தை		20
இன்று கண்டாய் போல் எவன் எம்மை பொய்ப்பது நீ
எல்லா கெழீஇ தொடி செறித்த தோள் இணை தத்தி
தழீஇக்கொண்டு ஊர்ந்தாயும் நீ - கலி 97/22

151 பாலை காவன் முல்லை பூதரத்தனார்
தம் நயந்து உறைவோர் தாங்கி தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇ
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
ஆப-மன் வாழி தோழி கால் விரிபு - அகம் 151/2,3

153 பாலை சேரமான் இளங்குட்டுவன்
நோகோ யானே நோ_தகும் உள்ளம்
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ
பந்து வழி படர்குவள் ஆயினும் நொந்து நனி
வெம்பும்-மன் அளியள் தானே இனியே - அகம் 153/2,3

புலவு நாறு இரும் கழி துழைஇ பல உடன்			10
புள் இறைகொண்ட முள் உடை நெடும் தோட்டு
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ
படப்பை நின்ற முட தாள் புன்னை
பொன் நேர் நுண் தாது நோக்கி
என்னும் நோக்கும் இ அழுங்கல் ஊரே	- அகம் 180/12,13

369 பாலை நக்கீரர்
கண்டிசின் மகளே கெழீஇ இயைவெனை
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு
மங்கையர் பல பாராட்ட செம் தார்
கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல்  - அகம் 369/1

379 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய
தெருளாமையின் தீதொடு கெழீஇ
அருள் அற நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து
ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே - அகம் 379/2,3

212 பிசிராந்தையார்
பைதல் சுற்றத்து பசி பகை ஆகி
கோழியோனே கோப்பெருஞ்சோழன்
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே	- புறம் 212/9,10

297
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி
துறை நணி கெழீஇ கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே வை நுதி
நெடு வேல் பாய்ந்த மார்பின்
மடல் வன் போந்தையின் நிற்குமோர்க்கே		10 - புறம் 297/7

3
யானை அனையவர் நண்பு ஒரீஇ நாய் அனையார்
கேண்மை கெழீஇ கொளல் வேண்டும் யானை
அறிந்தும் அறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்த வேல்
மெய்யதா வால் குழைக்கும் நாய் - நாலடி:22 3/2

6
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏது இன்மை கோடி உறும் - குறள்:82 6/1

10
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு - குறள்:82 10/1,2

36
தொழீஇ அட உண்ணார் தோழர் இல் துஞ்சார்
வழீஇ பிறர் பொருளை வவ்வார் கெழீஇ
கலந்த பின் கீழ் காணார் காணாய் மடவாய்
புலந்த பின் போற்றார் புலை - சிறுபஞ்:36/2,3

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *