கொகுடி என்பது அடுக்குமல்லி
1. சொல் பொருள்
ஒரு வகை மல்லிகை, அடுக்கு மல்லிகை, நட்சத்திர மல்லிகை, மல்லிகை அல்லாத வேறு ஒரு வகை
2. சொல் பொருள் விளக்கம்
நறுமணம் மிக்க குளிர்ச்சி மிக்க பூ
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a variety of jasmine creeper, Jasmine Sambac, star jasmine, Jasminum Pubescens, Arabian jasmine, Jasminum Arborescens Roxb.
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
ஞாழல் மௌவல் நறும் தண் கொகுடி /சேடல் செம்மல் சிறுசெங்குரலி - குறி 81,82 நறுமணம் மிக்க குளிர்ச்சி மிக்க பூ
குற்றம் அறியாத பெருமான் கொகுடி கோயில் - தேவா-சம்:1806/3 கொம்பு ஆர் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும் - தேவா-சம்:2162/3 கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே கொகுடி முல்லை - தேவா-சம்:3778/1 கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில் இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் - தேவா-அப்:2801/2,3 கொய் மாவின் மலர் சோலை குயில் பாட மயில் ஆடும் கொகுடிக்கோயில் எம்மானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:299/3,4 கூற்றானை கூற்று உதைத்து கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் ஏற்றானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:300/3,4 கொட்டு ஆட்டு பாட்டு ஆகி நின்றானை குழகனை கொகுடிக்கோயில் எட்டு ஆன மூர்த்தியை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:301/3,4 குருந்து ஆய முள் எயிற்று கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் இருந்தானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:302/3,4 கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில் அடி ஏறு கழலானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:303/3,4 கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக்கோயில் ஐயனை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:304/3,4 கொடி கொள் பூ நுண்இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் அடிகளை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:305/3,4 குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக்கோயில் உறைவானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:306/3,4 கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில் எம் கோனை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:307/3,4 குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறம்கூறும் கொகுடிக்கோயில் எண் தோள் எம்பெருமானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:308/3,4 குலை மலிந்த கோள் தெங்கு மட்டு ஒழுகும் பூம் சோலை கொகுடிக்கோயில் இலை மலிந்த மழுவானை மனத்தினால் அன்பு செய்து இன்பம் எய்தி - தேவா-சுந்:309/2,3 கூற்று உதைத்தார் திரு கொகுடி கோயில் நண்ணி கோபுரத்தை தொழுது புகுந்து அன்பர் சூழ - 6.வம்பறா:2 117/1 நறும் பாதிரியும் நாள் மலர் கொகுடியும் இறும்பு அமல் ஏலமும் ஏர் இலவங்கமும் - இலாவாண:12/20,21
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
அருமையான விளக்கம் நன்றி!