கோங்கு என்பதன் பொருள்ஒரு வகை இலவ மரம்
1. சொல் பொருள்
ஒரு வகை இலவ மரம்
2. சொல் பொருள் விளக்கம்
கோங்கம் என்று சங்கப்பாடல் கூறும் மரத்தை இக்காலத்தில் கோங்கு (Cochlospermum religiosum) எனக் கூறுகின்றனர்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
silk cotton tree, bombax gossipium,Cochlospermum gossypium;
4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப – கலி 33/12 பொரி அரை கோங்கின் பொன் மருள் பசு வீ – ஐங் 367/1 என்பதால், கோங்கம், கோங்கு ஆகியவற்றின் பூக்கள் பொன் நிறத்தது எனத் தெரிகிறது. கோங்கின் முகை இளம்பெண்களின் குவிந்த மார்பகத்துக்கு ஒப்பாகப் பலமுறை சொல்லப்படுகிறது. தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இள முலை கொட்டி – திரு 34,35 யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை – சிறு 25,26 முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் – குறு 254/2 முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை – கலி 56/23,24 கோங்கின் முதிரா இள முகை ஒப்ப எதிரிய தொய்யில் பொறித்த வன முலையாய் – கலி 117/2-4 கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து – அகம் 240/11 வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை – புறம் 336/9,10 இது கோங்கம் பூவின் மொட்டினை ஒத்து வருகிறது. ஆனால், கோங்கம் பூவின் மொட்டு ஒருமுறைகூட பெண்களின் மார்புக்கு ஒப்பாகக் கூறப்படவில்லை என்பதுவும் கவனிக்கத்தக்கது. கோங்கம் என்ற மரம் உறுதியான அடிமரத்தைக் கொண்டது. திணி நிலை கோங்கம் – ஐங் 343/2 ஆனால் கோங்கு என்ற மரம் பொரிந்துபோன அடிமரத்தைக் கொண்டது. பொரி அரை கோங்கின் பொன் மருள் பசு வீ – ஐங் 367/1 கோங்கம் பூவைப்போலவே கோங்கின் பூவும் நறுமணமுள்ளது. தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் – கலி 42/16 ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப – அகம் 317/11 கோங்கின் பொகுட்டு எலியின் காதைப்போன்றது என்கிறது புறம். வேனில் கோங்கின் பூம் பொகுட்டு அன்ன குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட – புறம் 321/4,5 எனவே, இது மேலும் ஆய்வுக்குரியது. பொறுத்தல் தகுவது ஒன்று அன்றோ நிற கோங்கு உருவ வண்டு ஆர்க்கும் உயர் வரை நாட - நாலடி:23 3/2,3 கோங்கு அரும்பு அன்ன முலையாய் பொருள் வயின் - நாலடி:40 10/3 ஏமாரார் கோங்கு ஏறினார் - பழ:341/4 பொன் வரை கோங்கு ஏர் முலை பூம் திருவேஆயினும் - சிறுபஞ்:43/3 கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து - அகம் 240/11 ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப - அகம் 317/11 கோங்கும் கொய் குழை உற்றன குயிலும் - அகம் 341/2 தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின்/குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர் - திரு 34,35 யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி - சிறு 25 தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய் - மது 338 புல் இதழ் கோங்கின் மெல் இதழ் குடை பூ - நற் 48/3 முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்/தலை அலர் வந்தன வாரா தோழி - குறு 254/2,3 பொரி அரை கோங்கின் பொன் மருள் பசு வீ - ஐங் 367/1 வண் சினை கோங்கின் தண் கமழ் படலை - ஐங் 370/1 முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என - கலி 56/23 பேணி துடைத்து அன்ன மேனியாய் கோங்கின்/முதிரா இள முகை ஒப்ப எதிரிய - கலி 117/2,3 சினை பூ கோங்கின் நுண் தாது பகர்நர் - அகம் 25/10 தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர் கோங்கின்/கால் உற கழன்ற கள் கமழ் புது மலர் - அகம் 153/16,17 வில் இட வீழ்ந்தோர் பதுக்கை கோங்கின்/எல்லி மலர்ந்த பைம் கொடி அதிரல் - அகம் 157/5,6 வேனில் கோங்கின் பூ பொகுட்டு அன்ன - புறம் 321/4 வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்/முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை - புறம் 336/9,10 வள்ளம் போல் கோங்கு மலரும் திருநாடன் - நள:392/3 கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய் - பால:1 13/3 பொரும் துணை கொங்கை அன்ன பொருஇல் கோங்கு அரும்பின் மாடே - பால:16 17/2 குரவம் குவி கோங்கு அலர் கொம்பினொடும் - ஆரண்:2 1/1 மரவம் கிளர் கோங்கு ஒளிர் வாச வனம் - ஆரண்:2 1/4 வில் திரு நுதல் மாதே அம் மலர் விரி கோங்கின் சுற்று உறு மலர் ஏறி துயில்வன சுடர் மின்னும் - அயோ:9 12/2,3 வனைந்த வேங்கையில் கோங்கினில் வயின்-தொறும் தொடுத்து - அயோ:10 24/2 பொன் அணி நிற வேங்கை கோங்குகள் புது மென் பூ - அயோ:9 14/2 அகிலும் ஆரமும் மாரவம் கோங்குமே - பால:16 28/4 பாடலம் படர் கோங்கொடும் பண் இசை - சுந்:6 31/1 கொங்கு அலர் கோங்கின் நெற்றி குவி முகிழ் முகட்டின் அங்கண் - சிந்தா:5 1281/2 பூத்த கோங்கு போல் பொன் சுமந்து உளார் - சிந்தா:2 419/1 கொங்கு உண் குழலாள் மெல் ஆகத்த கோங்கு அரும்பும் கொழிப்பில் பொன்னும் - சிந்தா:3 643/2 கோங்கு பூத்து உதிர்ந்த குன்றின் பொன் அணி புளகம் வேய்ந்த - சிந்தா:10 2253/1 பூத்த கோங்கும் வேங்கையும் பொன் இணர் செய் கொன்றையும் - சிந்தா:1 154/1 கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னை - மணி:19/67 பொன் நிற கோங்கின் பொங்கு முகிழ்ப்பு என்ன - உஞ்ஞை:41/64 கொங்கு ஆர் கோங்கின் கொய் மலர் அன்ன - உஞ்ஞை:42/206 முற்றிய கோங்கின் முழு தாள் பொருந்தி - உஞ்ஞை:55/125 கோங்கின் தட்டமும் குரவின் பாவையும் - உஞ்ஞை:57/98 கோல கோங்கின் கொழு மலர் கடுப்புறு - மகத:27/73 குமிழ்த்து எழு வெம் பனி கோங்கு அரும்பு ஏய்ப்ப - உஞ்ஞை:46/224 கோங்கு அரும்பு அழித்த வீங்கு இள மென் முலை - இலாவாண:2/211 பொன் கோங்கு ஏய்ப்ப நல் கலன் அணிந்த - வத்தவ:11/47 இரவும் இண்டும் குரவும் கோங்கும் கள்ளியும் கடம்பும் முள்ளியும் முருக்கும் - உஞ்ஞை:52/40,41 மராவும் மாவும் குராவும் கோங்கும் தண் நிழல் பொதும்பர் கண் அழல் காட்டும் - உஞ்ஞை:55/26,27 கோங்கு இளம் கொழு முகை நிகர் கொங்கையாள் பொருட்டால் - வில்லி:7 68/3 கோங்கு அசோகு தேக்கு ஆசினி பாடலம் குறிஞ்சி - சீறா:26/2 சந்து அகில் திலகம் குரவு தேக்கு ஆரம் தான்றி கோங்கு ஏழிலைம்பாலை - சீறா:1002/1 கோங்கு இள முலையின் செம்பொன் கொடி என என்னை சூழ்ந்த - சீறா:3196/3 கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள் வாஞ்சையுற தழுவி சிலுகு இட்டவர் - திருப்:266/3 கோங்கு இளநீர் இளக வீங்கு பயோதரமும் வாங்கிய வேல் விழியும் இருள் கூரும் - திருப்:527/1 வளர் கோங்கு இள மா முகை ஆகிய தன வாஞ்சையிலே முகம் மாயையில் வள - திருப்:529/3 குருவு அரும்ப கோங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ் - நாலாயி:406/3 கோங்கு அலரும் பொழில் மாலிருஞ்சோலையில் கொன்றைகள் மேல் - நாலாயி:595/1 கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு - நாலாயி:1141/3 கோங்கு செண்பக கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்து ஓடி - நாலாயி:1152/3 கொங்கை கோங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள் - நாலாயி:1263/3 கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில் கடி மலர் குறிஞ்சியின் நறும் தேன் - நாலாயி:1821/3 தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின் தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம் - நாலாயி:1573/2 புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று - நாலாயி:351/3 கொள்ள மிக்கு உயர்வ போன்ற கொங்கை கோங்கு அரும்பை வீழ்ப்ப - 1.திருமலை:5 136/3 கோங்கு அரும்பு ஆகிய கோணை நிமிர்த்திட - திருமந்:808/3 கோங்கின் பொலி அரும்பு ஏய் கொங்கை பங்கன் குறுகலர் ஊர் - திருக்கோ:13/1 குரு வளர் பூம் குமிழ் கோங்கு பைம் காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ - திருக்கோ:1/2 கொல் வினை வல்லன கோங்கு அரும்பு ஆம் என்று பாங்கன் சொல்ல - திருக்கோ:26/2 கோங்கு அரும்பும் தொலைத்து என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே - திருக்கோ:46/4 கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா வெண்ணீறு ஆடி - திருவா:39 1/2 முள்ளி நாள் முகை மொட்டு இயல் கோங்கின் அரும்பு தென் கொள் குரும்பை மூவா மருந்து - தேவா-சம்:2815/1 வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் - தேவா-சுந்:165/3 குரவம் சுரபுன்னை குளிர் கோங்கு இள வேங்கை - தேவா-சம்:885/3 கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் வாய்ந்த - தேவா-சம்:1157/3 குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குரா மரவம் - தேவா-சம்:1428/3 கோடலொடு கோங்கு அவை குலாவு முடி-தன் மேல் - தேவா-சம்:1831/1 தட்டு அலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும் தாழ் பொழில்-வாய் - தேவா-சம்:1909/2 கோங்கு அன்ன குவி முலையாள் கொழும் பணை தோள் கொடி_இடையை - தேவா-சம்:1910/1 பொன் போது அலர் கோங்கு ஓங்கு சோலை புத்தூரே - தேவா-சம்:2150/4 கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவு இடை மலர் உந்தி - தேவா-சம்:2663/1 விரவி ஞாழல் விரி கோங்கு வேங்கை சுரபுன்னைகள் - தேவா-சம்:2751/3 கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் - தேவா-சம்:2929/3 குரவு அமர் சுரபுனை கோங்கு வேங்கைகள் - தேவா-சம்:2976/3 குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை - தேவா-சம்:3013/1 கோங்கு இள வேங்கையும் கொழு மலர் புன்னையும் - தேவா-சம்:3131/1 குரை கழல் திரு முடி அளவு இட அரியவர் கோங்கு செம்பொன் - தேவா-சம்:3764/2 குருந்து உயர் கோங்கு கொடி விடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை - தேவா-சம்:4077/3 குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல்வீரட்டனாரே - தேவா-அப்:678/4 கோங்கு அணைந்த கூவிளமும் மத மத்தமும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும் - தேவா-அப்:2273/3 கோங்கு மலர் கொன்றை அம் தார் கண்ணியான் காண் கொல் ஏறு வெல் கொடி மேல் கூட்டினான் காண் - தேவா- அப்:2614/3 கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் - தேவா-சுந்:25/1 தளிர் தரு கோங்கு வேங்கை தட மாதவி சண்பகமும் - தேவா-சுந்:1002/3 கோங்கொடு செருந்தி கூவிளம் மத்தம் கொன்றையும் குலாவிய செம் சடை செல்வர் - தேவா-சம்:816/3 கொய்யா மலர் கோங்கொடு வேங்கையும் சாடி - தேவா-சுந்:130/1
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்