சிறுமாரோடம் என்பது செங்கருங்காலி மரம்
1. சொல் பொருள்
(பெ) கருங்காலி, வெள்ளை கருங்காலி, செங்கருங்காலி, மரம்.
2. சொல் பொருள் விளக்கம்
சிறு-மாரோடம் என்னும் குறிப்பால் இந்தப் பூ சிறியது என உணரமுடிகிறது. மாரோடம் நறுமணம் மிக்க மலர்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Red catechu, Red ebony, Acaria catechu-sundra, Acacia catechu, Senegalia catechu, diospyros ebenum;
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
குல்லை பிடவம் சிறுமாரோடம்/வாழை வள்ளி நீள் நறு நெய்தல் - குறி 78,79 பராரை பாதிரி குறு மயிர் மா மலர் நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு – நற் 337/4-6 பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா - ஐங் 93/2
குல்லை பிடவம் சிறுமாரோடம் – குறி 78
ஆய் பூம் தில்லையும் அணி மாரோடமும் ஆரமும் சந்தும் அகிலும் தமாலமும் - உஞ்ஞை:50/31,32
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்