Skip to content

சொல் பொருள்

(பெ) 1. குறிஞ்சி நிலத்தவன்,

2. உயரமான பரணில் இருப்பவன்,

3. எட்டமுடியாத இடத்தில் இருப்பவன், 

சொல் பொருள் விளக்கம்

குறிஞ்சி நிலத்தவன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

inhabitant of a hilly tract

One who is on a platform on a tree

one who is unapproachable

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சேணோன் அகழ்ந்த மடி வாய் பயம்பின் – மது 294

குறவன் தோண்டின, மூடின வாயையுடைய பொய்க்குழியில்

சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில் – நற் 276/5

உயர்ந்த பரணில் இருக்கும் தினைக்காவலன் கட்டிய உயரமான கால்களைக் கொண்ட பரணில்,

செல்வை ஆயின் சேணோன் அல்லன் – புறம் 103/5

நீ அவன்பால் போவாயாகின் அவன் கிட்டமுடியாதவன் அல்லன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *